சின்னத்திரையிலிருந்து "லைன்ஸ்' என்ற படத்தில் வித்தியாசமான பாத்திரத்தில் அறிமுகமான ஹீனாகான், மீண்டும் இந்திய - அமெரிக்க கூட்டு தயாரிப்பில் எச்.ஜி.வெல்ஸ் எழுதிய "தி கன்ட்ரி ஆஃப் தி பிளைன்ட்' என்ற நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படத்தில் பார்வையற்றவராக வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்கிறார். இதற்காக பார்வையற்றோர் பள்ளிக்குச் சென்று அங்குள்ளவர்களை பார்த்து பயிற்சிப் பெற்று வருகிறார். ""நான் வித்தியாசமான பாத்திரங்களைத் தேர்வு செய்ய என்ன காரணம் என்று கேட்கிறார்கள். பெரும்பாலான நடிகைகள் கமர்ஷியல் படங்களில் நடிக்க விரும்புவார்கள். அது போன்ற பாத்திரங்கள் எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும். நடிப்புத் திறமையை வெளிப்படுத்தவே வித்தியாசமான பாத்திரங்களை தேர்ந்தெடுக்கிறேன்'' என்கிறார் ஹீனாகான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.