பிரண்டையின் பயன்கள்!

பிரண்டை, நரம்புத்தளர்ச்சியைப் போக்குகிறது. ஆண்மையைப் பெருக்குகிறது. பசியைத் தூண்டிவிடுவதில் இதற்குத்தான் முதலிடம்.
பிரண்டையின் பயன்கள்!
Updated on
1 min read

பிரண்டைக் கொடிக்கு வச்சிரவல்லி, சஞ்சீவி, உத்தன என்கிற பெயர்களும் உண்டு. 
• பிரண்டை, நரம்புத்தளர்ச்சியைப் போக்குகிறது. ஆண்மையைப் பெருக்குகிறது. பசியைத் தூண்டிவிடுவதில் இதற்குத்தான் முதலிடம்.
• நெய்விட்டு பிரண்டைத் தண்டை வதக்கி துவையலாக அரைத்து உண்டு வர வயிற்றுப் பொருமல் சிறுகுடல், பெருங்குடல் புண் நீக்கி நல்ல பசி உண்டாகும்.
• பிரண்டையை வதக்கி அத்துடன் சிறிது மிளகைக் கூட்டி அரைத்துச் சுண்டைக்காய் அளவு, தினந்தோறும் இரண்டு வேளை சாப்பிட சுவாச காசம் (ஆஸ்துமா) சாந்தப்படும். 
• இளம்பிரண்டையை நறுக்கி, நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து, காலை, மாலை இருவேளையும் நெல்லிக்காய் அளவிற்கு உண்டு வர வேண்டும். இப்படி ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.
• பிரண்டைத் துவையல் மிகுந்த ருசியுள்ளது. இதைச் சாப்பிட்டால் பசி உண்டாகும். செரிமானக் கோளாறைப் போக்கும். மலச்சிக்கலை நீக்கும். குடலில் புழு இருந்தால் அவற்றைக் கொல்லும். உடலுக்கு பலத்தைக் கொடுக்கும்.
• பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கு பிரண்டை சிறந்த மருந்தாகும். 
• பிரண்டை உப்பை 2 - 3 கிராம் பாலில் கொடுத்துவர இரு திங்களில் உடல் பருமன் குறைந்து விடும். ஊளைச் சதைகளையும் குறைக்கும்.
• பிரண்டைத் தண்டுகளைச் சிறிய அளவில் நறுக்கி ரசத்தில் சேர்த்துக் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் குடித்தால் எலும்புகள் பலம் பெறும். முறிந்த எலும்பு விரைவில் கூடும். ஒரு மாதம் பிரண்டை ரசம் குடிக்கவேண்டும்.
• உடலில் கொழுப்புச் சத்துகள் நிறைந்துள்ளவர்களுக்கு ரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து ரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இருதயத்திற்குத் தேவையான ரத்தம் செல்வது தடைப்படுகிறது. இதனால் இதயவால்வுகள் பாதிப்படைகின்றன. பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.
• பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும்.
• எலும்பு முறிவு ஏற்பட்டால், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டு வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். உடைந்த எலும்புகள் விரைவில் இணைந்து எலும்புகள் பலம்பெறும்.
- கே.ஆர். உதயகுமார்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com