சுதந்திரப் போராளினிகள்!

1857=இல்  முதல்  சுதந்திர போரின்போது  பிரிட்டிஷாருக்கு  எதிராக  போராடிய பீகாரின்  பாட்னா ஆட்சியாளர்.
சுதந்திரப் போராளினிகள்!
Updated on
1 min read

பேகம் ஹஸ்ரத் மஹல்

1857=இல்  முதல்  சுதந்திர போரின்போது  பிரிட்டிஷாருக்கு  எதிராக  போராடிய பீகாரின்  பாட்னா ஆட்சியாளர்.  வட இந்தியாவின்  குறு நிலப் பகுதியான  "அவத்' தில் (சமஸ்தானம்)  ஒரு சாதாரண  குடும்பத்தில்  பிறந்தவர்.  முஹம்மதி கானுமின்.  1820=இல்  கானுமின் "அவத்'தின் கடைசி  நவாப்  ஆன வாஜி அலிஷாவை  திருமணம் செய்து கொண்டவர்,  அவர் பேகம் ஹஸ்ரத் மஹல் ஆனார். 

1856 =இல்  பிரிட்டிஷார்  "அவத்'தைக்  கைப்பற்றி, வாஜித்  அலிஷாவை கல்கத்தாவுக்கு  நாடு கடத்தினர்.  இதற்கு  எதிராக  பேகம்  ஹஸ்ரத் மக்களை ஒன்று திரட்டி  பிரிட்டிஷாருக்கு  எதிராகப் போராடினார்.

1857 சுதந்திர போரில்,  ராஜா  ஜெய்பால்  சிங்குடன்  இணைந்து  ஹஸ்ரத் மஹல் "அவத்'தின் தலைநகரமான  லக்னோவை பிரிட்டிஷாரிடமிருந்து  மீட்டெடுத்தார். தனது  பத்து வயது  மகனை  மன்னராக்கினார்.  பத்து மாதங்களுக்குப் பின் 1858=இல்  பிரிட்டிஷார்  லக்னோவை  மீண்டும்  கைப்பற்றினர். பிரிட்டிஷாருக்கு எதிராக  போராடுவது  கடினம்  என்றுணர்ந்த  பேகம்  நேபாளத்துக்கு  இடம் பெயர்ந்தார்.  1879=இல்  காலமானார்.

பீனாதாஸ்

1911=இல்  பிறந்தவர்.  கொல்கத்தாவை  தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட  சாத்ரி சங்கத்தில்  பெண்  மாணவர்  சங்கத்தில்  பீனாவின் மூத்த சகோதரி கல்யாணி  உறுப்பினராக  இருந்தார்.  இயக்கச்  செயல்பாடுகளை  காரணம் காட்டி  பிரிட்டிஷார்  கல்யாணியை  சிறையில்  அடைத்தனர்.  தனது சகோதரியைப் பின்பற்றி  பீனாவும்  மாணவியர் சங்கத்தில்  இணைந்தார்.

1927  =இல்  வங்காள  ஆளுநராக  பதவியேற்ற  ஸ்டான்லி  டாக்சனை  படுகொலை செய்யும்  பொறுப்பு  பீனாவிடம்  ஒப்படைக்கப்பட்டது.  தனது  கல்லூரியில் பட்டமளிப்பு  விழாவுக்கு  வந்த  கவர்னரை  துப்பாக்கியால்  சுட்டார் பீனா.  அந்த குற்றத்துக்காக  ஆறு ஆண்டுகள்  சிறையில் அடைக்கப்பட்டார்.

1942 =இல்  "வெள்ளையனே  வெளியேறு'  போராட்டத்தில்  கலந்து கொண்டார். இந்திய  சுதந்திரத்துக்கு  பின்பும் தீவிர  அரசியலில்  ஈடுபட்டார். சுதந்திர போராட்ட வீரர்களுக்கான  பென்ஷனை  நிராகரித்தவர்  1986=இல்  ரிஷிகேஷில் காலமானார். இவரது  சுயசரிதை  போன்ற படைப்புகள், "சியாம்கால் ஜங்கார்', "பித்யதான்'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com