தெலுங்கில் பிரியா வாரியர்
By DIN | Published On : 03rd July 2019 10:26 AM | Last Updated : 03rd July 2019 10:26 AM | அ+அ அ- |

புருவ அழகி பிரியா பிரகாஷ் வாரியர், தெலுங்கில் சந்திரசேகர் எலட்டி இயக்கும் "சாகசம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். ஏற்கெனவே இந்தப் படத்தில் ராகுல் ப்ரீத் சிங் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகி என்றாலும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரம் என்பதால் பிரியா பொருத்தமானவர் என கருதி அவரிடம் கதையை சொல்லியிருக்கிறார் இயக்குநர். பிரியா ஒப்புதல் அளித்தால் இதுவே அவரது முதல் தெலுங்கு படமாக இருக்கும்.