வாழையின் மருத்துவ குணங்கள்
By DIN | Published On : 03rd July 2019 11:03 AM | Last Updated : 03rd July 2019 11:03 AM | அ+அ அ- |

வாழையில் பல்வேறு நோய் எதிர்ப்பு சக்திகள் உள்ளன. முக்கிய நோய்களான மன அழுத்தம், புற்றுநோய், இதய நோய் ஆகியவற்றை இதன் பச்சயம் தடுக்கிறது.
பிசூடான உணவை வாழை இலையில் பரிமாறும் போது, அந்த சூட்டில் இலை லேசாக வெந்து இலையின் பச்சயத்தில் உள்ள சத்துக்கள் சாப்பாட்டில் கலந்து விடும். இதன் மூலம் உயிர் சத்தான ஏ, சிட்ரிக் அமிலம், கால்சியம் மற்றும் கரோட்டின் ஆகியவை நமக்கு கிடைக்கின்றன.
பிஅது போன்று வாழைப் பூவில் விட்டமின் பி உள்ளது. இது பெண்களின் கர்ப்பப் பை பிரச்னைகளுக்கு தீர்வாகிறது. இது மலட்டு தன்மையை நீக்குவதுடன் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகிறது.
பிவாழைக்காயை கறி , பொரியல், சம்பார் என சமைத்து சாப்பிடும்போது அது மிகுந்த பலனை தருகிறது. இதன் நார்ச்சத்து கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்துவதுடன் ரத்த நாளங்களில் உள்ள அடைப்பை தவிர்க்கிறது. மேலும் கபம், பித்தம் போன்றவற்றை போக்குகிறது. இதில் பிஞ்சு வாழைக்காயை கூட்டு செய்து சாப்பிட்டால் உடல் உறுதி அதிகரிக்கும். வயிற்று புண்கள் ஆறுவதுடன் ரத்தம் அதிகம் பெருகும். மூட்டு வலி உள்ளவர்கள் அதிகம் வாழைக்காயைப் பயன்படுத்தக்கூடாது.
பிஎவ்வகை வாழைப்பழமாக இருந்தாலும் அனைத்திலும் விட்டமின் ஏ, பொட்டாசியம் உள்ளது.
பிதினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட ரத்த அழுத்தத்தை குறைப்பதுடன் குடல் புண், வயிற்றுப் போக்கு, ரத்த கசிவு ஆகியவற்றை தீர்க்கும்.
பிசிறுநீர் பிரச்னை, சிறுநீரக கல் உள்ளவர்கள் வாழைத் தண்டை வாரம் இருமுறை கூட்டு செய்து சாப்பிட நன்கு குணம் தெரியும்.
பிவாழை மரப்பட்டையின் சாற்றை வாழை இலை குருத்தை வைத்து தீப்பூண்கள் மீதும் கொப்பளங்கள் மீதும் கட்ட அவை விரைவில் குணமாகும்.
- நாகை சத்யா பாபு