முகத்தை பளபளப்பாக்கும் கேரட் ஃபேஷியல்...!

கேரட் சாப்பிடுவதால் நம் சருமத்தின் நிறம் பொன்போன்று ஜொலிக்கும். கேரட்டில் உள்ள சத்துகள் கண்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்பது நாம் அறிந்ததே. அதே போன்று கேரட் சாப்பிடுவதால் சருமம் ஆரோக்கியமாக
முகத்தை பளபளப்பாக்கும் கேரட் ஃபேஷியல்...!
Published on
Updated on
1 min read

கேரட் சாப்பிடுவதால் நம் சருமத்தின் நிறம் பொன்போன்று ஜொலிக்கும். கேரட்டில் உள்ள சத்துகள் கண்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்பது நாம் அறிந்ததே. அதே போன்று கேரட் சாப்பிடுவதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

குறிப்பாக உடல் எடை ஆரோக்கியமாவதுடன், அதிக வசீகரத்துடன் காணப்படுவார்கள். வெறும் 2 மாதங்கள் மட்டுமே பழங்கள், காய்கறிகளை அதிகம் உட்கொண்டால் இதன் பிரதிபலனை உடனே உணர முடியும் என தெரிவித்துள்ளனர் ஆய்வாளர்கள்.

சருமம் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்க உடலின் ஜீரண சக்தி சரியாக இருக்க வேண்டும். எனவே தினசரி நாம் உணவு உண்டபின் ஒரு கேரட்டை மென்றுத்தின்றால் கெடுதல் விளைவிக்கக்கூடிய கிருமிகள் அழிந்துவிடும். உமிழ்நீர் சுரப்பு அதிகரிக்கும் ஜீரணத்தை துரிதப்படுத்தும்.

கேரட்சாறுடன் பசலைக்கீரை சாறும் எலுமிச்சை சாறும் கலந்து குடிக்க மலச்சிக்கல் நீங்கும். கேரட்டை மென்று தின்ன வாய்நாற்றம் தீரும். கேரட் சூப் வயிற்றுப்போக்கை குணப்படுத்தும்.
கேரட் ஃபேஷியல்: 

இரண்டு கேரட்டினை எடுத்து நன்றாக கழுவி அரைக்கவும். அதனை முகத்தில் அப்ளை செய்யவும். நன்றாக உலர வைத்து பின்னர் அதனை உரித்து எடுக்கவும். பின்னர் வெது வெதுப்பாக நீரில் பஞ்சினை நனைத்து முகத்திற்கு ஒத்தடம் கொடுக்கவும். வாரம் இருமுறை கேரட் மாஸ்க் போட முகம் பொன்னிறமாக ஜொலிக்கும்.

கேரட்டுடன் சர்க்கரை சேர்த்து கெட்டியாக அரைத்து அதை முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வர முக சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இறந்த செல்கள் இருந்தால் உதிர்ந்து விடும். புதிய ஆரோக்கியமான செல்கள் உற்பத்தியாகும்.

நச்சுக்கழிவுகள்: கேரட்டில் உள்ள பொட்டாசியம், வைட்டமின் "எ' போன்றவை உடலின் நச்சுக்கழிவுகளை வெளியேற்றுகிறது. இதனால் முகப்பரு, கரும்புள்ளி உள்ளிட்ட சரும நோய்கள் ஏற்படுவதில்லை.

தினசரி கேரட் ஜூஸ் குடித்து வர கோடைகாலத்தில் ஏற்படும் சருமநோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். கோடையில் முகம் கருமையாவதை தடுக்கும். முகச்சுருக்கம் ஏற்படாமல் சருமம் பாதுகாக்கப்படும்.

கேரட்டினை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் சருமப் பாதுகாப்பிற்காக விலை உயர்ந்த ரசாயனப் பொருட்கள் வாங்காமல் தவிர்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com