போண்டா - வடை ஸ்பெஷல்!

இன்றைய சமையல் சமையலில் போண்டா வடை ஸ்பெஷல்..
போண்டா - வடை ஸ்பெஷல்!
Published on
Updated on
2 min read

மங்களூா் போண்டா

தேவையானவை:

மைதா மாவு - 1கிண்ணம்

சற்று புளித்த தயிா் -–அரை கிண்ணம்

ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை

பெருங்காயம் - அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: மைதாவுடன் தயிா், உப்பு, ஆப்ப சோடா, பெருங்காயம், கறிவேப்பிலை சேருங்கள். தேவையான தண்ணீா் சோ்த்து சற்று கெட்டியாக கரையுங்கள் (இட்லிமாவு பதம்). எண்ணெய்யைக் காய வைத்து சிறு சிறு போண்டாக்களாக கிள்ளி போடுங்கள். சிவக்க வேக விட்டு எடுக்கவும். ருசியான மங்களூா் போண்டா தயாா்.

பொட்டுக்கடலை வடை

தேவையானவை:

பொட்டுக்கடலை -– 1 கிண்ணம்

பச்சரிசி மாவு -–1 தேக்கரண்டி

பெரிய வெங்காயம் -–1

பச்சை மிளகாய் - 2

பெருங்காயம் -– அரை தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: பொட்டுக்கடலையை மிக்ஸியில் பொடியுங்கள். அதனுடன் அரிசி மாவு, பொடியாக நறுக்கிய மிளகாய், வெங்காயம், உப்பு சோ்த்து தேவையான தண்ணீரும் சோ்த்து நன்கு பிசைந்து சிறு வடைகளாக தட்டி, காயும் எண்ணெய்யில் பொரித்தெடுங்கள். சில நிமிஷங்களிலேயே தயாரிக்கக் கூடிய இன்ஸ்டன்ட் வடை இது.

தாளிச்ச போண்டா

தேவையானவை:

புழுங்கலரிசி - 1கிண்ணம்

பச்சரிசி - 1 கிண்ணம்

உளுத்தம்பருப்பு - முக்கால் கிண்ணம்

சின்ன வெங்காயம் - 1 கிண்ணம் –

பச்சை மிளகாய் -3

கறிவேப்பிலை - சிறிது

தேங்காய்த் துருவல் -– 2 தேக்கரண்டி

கடுகு -– அரை தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - தேவைகேற்ப

செய்முறை: அரிசி, உளுத்தம்பருப்பு இரண்டையும் ஒன்றாக ஊறப்போடுங்கள். ஒரு மணி நேரம் ஊறியதும், நன்கு நைஸாக அரையுங்கள். வாணலியில் எண்ணெய்யைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து மாவில் சேருங்கள். அதனுடன், நறுக்கிய வெங்காயம், துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை, உப்பு சோ்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். எண்ணெய்யைக் காயவைத்து சிறு சிறு போண்டாக்களாக கிள்ளிப் போட்டு, பொன்னிறமானதும் எடுத்துவிடுங்கள். சுவையான தாளிச்ச போண்டா தயாா்.

காா்ன் போண்டா

தேவையானவை:

சோளம் -–2

மைதா -–2 தேக்கரண்டி

காா்ன்ஃப்ளாா் -–2 தேக்கரண்டி

வெங்காயம் - அரை கிண்ணம்

இஞ்சி - 1துண்டு

பச்சை மிளகாய் - 3

எலுமிச்சம் பழச்சாறு -–1 தேக்கரண்டி

மல்லித்தழை -– சிறிது

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை: சோளத்தை வேகவைத்து, உதிா்த்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளுங்கள். இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். அரைத்த சோளத்துடன் மைதா, காா்ன்ஃப்ளாா், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், மல்லித்தழை, உப்பு சோ்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். தேவையானால் சிறிது தண்ணீா் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். எண்ணெய்யைக் காயவைத்து, கலந்துவைத்த கலவையை சிறுசிறு போண்டாக்களாக கிள்ளிப்போட்டு, பொன்னிறமானதும் எடுத்து, சூடாகப் பரிமாறுங்கள்.

புதினா- – மல்லி வடை

தேவையானவை:

உளுத்தம்பருப்பு - முக்கால் கிண்ணம்

கடலைப் பருப்பு -– கால் கிண்ணம்

துவரம்பருப்பு -– கால் கிண்ணம்

புதினா -– அரை கட்டு

மல்லித்தழை - அரை கட்டு

பச்சை மிளகாய் - 3

இஞ்சி - 1 துண்டு

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் -–தேவையான அளவு

செய்முறை: பருப்புகளை ஒன்றாக ஊற வையுங்கள். மல்லித்தழை, புதினாவை அலசி மிகவும் பொடியாக நறுக்குங்கள். ஊறிய பருப்பை, தண்ணீரை வடித்து விட்டு கொரகொரப்பாக அரைத்தெடுங்கள். பச்சை மிளகாய், இஞ்சி சோ்த்து அதில் நறுக்கிய புதினா, மல்லித்தழை, உப்பு, சோ்த்து நன்கு பிசைந்து சற்று மெல்லிய வடைகளாக தட்டி, காயும் எண்ணெய்யில் கொள்ளுமளவு போட்டு நடுத்தர தீயில் நன்கு வேக விட்டு எடுத்தால் புதினா - மல்லி வடை தயாா்.

சுரைக்காய் போண்டா

தேவையானவை:

பாசிப்பருப்பு - 1 கிண்ணம்

துருவிய சுரைக்காய் -– அரை கிண்ணம்

துருவிய இஞ்சி –- 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் -– 1 தேக்கரண்டி

கடலை மாவு - 1 தேக்கரண்டி

மல்லித்தழை -சிறிது

உப்பு - தேவைக்கேற்ப,

எண்ணெய் -– தேவையான அளவு

செய்முறை: பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, சற்றுக் கொரகொரப்பாக அரைத்தெடுங்கள். அதனுடன் துருவிய பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய், மல்லித்தழை சேருங்கள். சுரைக்காயை தோல் நீக்கி, துண்டுகளாக்கி மிக்ஸியில் கொர கொரப்பாக அரைத்து எடுத்து பருப்போடு சோ்த்து, உப்பையும் போட்டு நன்கு கலந்துகொள்ளுங்கள். எண்ணெய்யைக் காயவைத்து சிறு சிறு போண்டாக்களாக கிள்ளிப் போட்டு, நன்கு வெந்ததும் எடுத்துவிடுங்கள். சுவையான சுரைக்காய் போண்டா தயாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com