கரிசலாங்கண்ணியின் மருத்துவப் பயன்கள்!

கீரைகளின் ராணி என்றழைக்கப்படுவது கரிசலாங்கண்ணி கீரை. இந்த கீரையில் இரண்டு வகை உண்டு. ஒன்று வெள்ளை கரிசலாங்கண்ணி. மற்றொன்று மஞ்சள் கரிசலாங்கண்ணி.
கரிசலாங்கண்ணியின் மருத்துவப் பயன்கள்!
Published on
Updated on
1 min read

கீரைகளின் ராணி என்றழைக்கப்படுவது கரிசலாங்கண்ணி கீரை. இந்த கீரையில் இரண்டு வகை உண்டு. ஒன்று வெள்ளை கரிசலாங்கண்ணி. மற்றொன்று மஞ்சள் கரிசலாங்கண்ணி. இதன் வேறு பெயர்கள், வெண்கரிசாலை, கையந்தகரை, கைகேசி, கரிக்கை, கரியசாலை, பிருங்கராஜம், தேகராஜம் மற்றும் பொற்றலைக்கையான் ஆகியனவாகும்.

இது புரதச்சத்து, கால்சியம், இரும்பு, தங்கச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துகளை உள்ளடக்கியது.

கரிசலாங்கண்ணி கீரை அதிகப்படியான மருத்துவப் பயன்கள் கொண்டமையால் வள்ளலார் இக்கீரையை தெய்வீக மூலிகை என்றும், ஞானபச்சிலை என்றும் கூறியுள்ளார்.

 உடல் கசடை நீக்கி, தேக ஆரோக்கியத்தினை பெருக்குகிறது.
 மூப்பைத் தடுத்து, தோல் பிணியைப் போக்குகிறது.
 புற்றுநோய் கிருமிகளை வளரவிடாமல் தடுக்கிறது.
 மஞ்சள் காமாலையை குணமாக்குகிறது.
 சுவாசப்பிரச்னையைப் போக்குகிறது.
 கல்லீரலின் பாதுகாவலனாக உள்ளது.
 உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு ஆற்றலை முடுக்கிவிடுகிறது.
 ஈறுகளைப் பலப்படுத்துகிறது.
 பார்வை நரம்புகளைப் பலப்படுத்தி, கண்வறட்சியைப் போக்குகிறது.
 அஜீரணம் மற்றும் வயிறு தொடர்பான பிரச்னைகளை களைகிறது.
 தலைமுடி உதிருதல், இளநரை மற்றும் பொடுகு போன்றவற்றை போக்குவதில் பெரும்பங்காற்றுகிறது.
 அழகுசார்ந்த வகையிலும் கரிசலாங்கண்ணிகீரை பயன்படுகிறது. கண் மை மற்றும் கூந்தல் தைலம், தயாரிக்கலாம்.
 கரிசலாங்கண்ணியைப் பருப்புடன் சேர்த்தும், பொரியல் செய்தும், சூப் வைத்தும், அன்றாட உணவில் ஏதேனும் ஒருவகையில் பயன்படுத்தி வர உடலுக்கு நல்ல குளிர்ச்சியையும், ஆரோக்கியத்தையும், பலத்தையும் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com