இசையால் ஒரு விழிப்புணர்வு!

தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் உலகம் நொடிக்கு நொடி பல மாறுதல்களை விரும்பி வருகிறது. இதனை சிலர் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
இசையால் ஒரு விழிப்புணர்வு!

தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் உலகம் நொடிக்கு நொடி பல மாறுதல்களை விரும்பி வருகிறது. இதனை சிலர் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஆண், பெண் என இருபாலருமே திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். சிலர் இளம் பருவத்தில் தங்களது திறமைகளை சரியாக கணித்து அதன் பாதையில் பயணிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அந்த வரிசையில் இடம்பிடித்து இசையில் மகிழ்விக்கிறார் வெளிநாடு வாழ் மருத்துவ மாணவியான இளம் கலைஞர் எஸ். ஹிரண்யா.

இந்த கரோனா காலத்தில் தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து விழிப்புணர்ச்சி பாடல் ஒன்றை வெளியிட்டு பலரது பாராட்டைப் பெற்ற இளம் இசைக்கலைஞராகவும் இருந்து வருகிறார். அமெரிக்காவின் நியூயார்க் நகரின் அருகேயுள்ள கிரெனடா எனும் பகுதியில் உள்ள புனிதஜார்ஜ் (எஸ்டி ஜார்ஜ்) பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மருத்துவம் முடித்த மாணவியான எஸ். ஹிரண்யா சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர். 

பூர்வீகம் இந்தியா அதுவும் தமிழ் நாட்டில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள நாச்சியாபுரம் என்கிற சிறிய கிராமம். 

இவரது தந்தை சுரேஷ் நாச்சியப்பன் சிங்கப்பூர் கணினி நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவரது தாயார் நாகம்மை சுரேஷ் சிங்கப்பூரில் கணினி நிறுவனம் நடத்தியவர். தற்போது ஹிரண்யாவுடன் வசித்துவருகிறார்.

ஹிரண்யாவின் மூத்த சகோதரி கிருத்திகா ஆஸ்திரேலியாவில் உள்ள கணினி நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஹிரண்யா கரோனா தீநுண்மி தாக்கம் குறித்து விழிப்புணர்வுப் பாடலை வெளியிட்டு அத்துடன் நின்றுவிடாமல் ஜூம் செயலி மூல மும், முக நூல் மூலமும் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தியா ஆகிய நாடுகளின் பல இசை நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து தன் பாடல்கள் மூலம் அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.

 ஹிரண்யா பள்ளிப்படிப்பை சிங்கப்பூரில் நிறைவு செய்தார். தனது பள்ளியில் 10 -ஆம் வகுப்பில் முதல் மாணவியாக தேர்ச்சிபெற்று டாக்டர் ஏபிஜெ. அப்துல்கலாம் விருது பெற்று, பள்ளி உதவித்தொகை பெற்றவர். அதன் மூலம் 11 மற்றும் 12 ஆம் வகுப்பை லண்டனில் படித்தார். தற்போது கிரெனாடாவில் மருத்துவம் பயிலும் இவர் அங்கும் முதலாம் ஆண்டிலேயே உயர் மதிப்பெண் பெற்று "லெகசி ஆஃப் எக்ஸ் லென்சி' எனும் விருதும் பெற்றுள்ளார். 

மேலும் வெப்னார் மூலம் பல மருத்துவர்களுக்கான நிகழ்ச்சிகளிலும் ஹிரண்யா பேசி வருகிறார்.  ஒரு தலைசிறந்த மருத்துவராகவும், இசைக்கலைஞராகவும் நாட்டுக்குச் சேவை செய்வதே தனது குறிக்கோள் என்கிறார் இந்த இளம் கலைஞர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com