டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...

சுண்டலை வேக வைத்து இறக்கும்போது, ஆம்சூர் பொடி,வெள்ளை எள்ளுப் பொடி தூவினால் சுவை சூப்பராக இருக்கும்.

சுண்டலை வேக வைத்து இறக்கும்போது, ஆம்சூர் பொடி,வெள்ளை எள்ளுப் பொடி தூவினால் சுவை சூப்பராக இருக்கும்.

உருளைக்கிழங்கில் ஃபிங்கர் சிப்ஸ் செய்வது போல் மரவள்ளிக் கிழங்கிலும் செய்யலாம்.
நான்ஸ்டிக் பேனில் திரட்டுப் பால் செய்தால் பால் பொங்காது. அடிக்கடி கிளறிவிட வேண்டியதில்லை. சாதாரண பாத்திரத்தில் செய்வதைவிட  அதிக அளவு கிடைக்கும்.
அடை  நன்கு கரகரப்பாக இருக்க வேண்டும் என்றால் பாசிப்பருப்பு கூடுதலாகச் சேர்க்க வேண்டும்.
பாதாம் பருப்பை தண்ணீரில் போட்டு மைக்ரோவேவ் ஓவனில் முப்பது விநாடிகள் வைத்து எடுத்தால் எளிதாக  உரிக்க வரும்.
எலுமிச்சை சாதம், தயிர் சாதம் செய்யும் போது பச்சை மிளகாய்க்குப் பதில் குடைமிளகாயை நறுக்கி வதக்கிச் சேர்த்தால் சுவை கூடும். காரம் இருக்காது.
எந்தவகை உப்புமாவாக இருந்தாலும், துருவிய மாங்காயைச் சேர்த்தால் சுவை கூடும்.
மைதாமாவை நீர் விட்டுப் பிசையாமல் அப்படியே ஒரு பாத்திரத்தில் கொட்டவும். அதை நீராவியில் வேக வைத்து எடுத்து தேவைக்கேற்ப உப்பும் நெய்யும் சேர்த்துப் பிசைந்து முறுக்கு செய்தால் சூப்பராக இருக்கும்.
அரிசிமாவு, கேழ்வரகு மாவு, உளுந்த மாவு இவற்றில் வடை தட்டும் போது, நேரமாகி விட்டால் மாவு இளகிவிடும். வடை தட்ட வராது. ஒரு கைப்பிடி கார்ன் ஃப்ளார் கலந்து தட்டினால் பதம் சரியாகிவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com