கிச்சன் டிப்ஸ்...

கிச்சன் டிப்ஸ்...

மிளகு, காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, சீரகம் ஆகியவற்றை வறுத்து அரைத்து புளித்த மோருடன் கலந்து கறிவேப்பிலை, கடுகு தாளித்து கொதிக்க வைத்தால் புது விதமான ரசம் தயார்.
Published on

மிளகு, காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, சீரகம் ஆகியவற்றை வறுத்து அரைத்து புளித்த மோருடன் கலந்து கறிவேப்பிலை, கடுகு தாளித்து கொதிக்க வைத்தால் புது விதமான ரசம் தயார்.

*உளுத்தம் பருப்பை ஊறப் போட்டு அரைத்து கோதுமை மாவுடன்  சேர்த்து முதல் நாள் இரவே கரைத்து வைத்து மறுநாள் காலை தோசை வார்த்தால் சூப்பராக இருக்கும்.

*மோர் மிளகாய் தயாரிக்கும்போது அதனுடன் பாகற்காயை வில்லைகளாக நறுக்கிப் போட்டு வற்றல் செய்தால் கசப்பும் காரமுமாக டேஸ்ட்டாக இருக்கும்.

*வேகவைத்த உருளைக்கிழங்குடன் தேவையான அளவு அரிசிமாவு, கடலை மாவு சேர்த்து ஓமப்பொடி பிழிந்தால் சூப்பராக இருக்கும்.

*கூட்டு மீதமாகி விட்டால் அதனுடன் தேவையான அளவு பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு வெங்காயம் சேர்த்து கொதிக்க வைத்துவிட்டால் மாலை டிஃபனுக்கு குருமா தயார்.

*ஆரஞ்சு பழத் தோலையும் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வதக்கி வத்தல் குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும்.

*ஒரு கப் மாவிற்கு ஒரு ஸ்பூன் வீதம் ரவை கலந்து பிசைந்து பூரி செய்தால் பூரி உப்பலாகத் தோன்றும்.

*பாயசம் செய்ய வேண்டிய ஜவ்வரிசியை சிறிது நேரம் ஊற வைத்துவிட்டு செய்தால் பாயசம் சீக்கிரம் ரெடியாகி விடும்.

*பஜ்ஜி போட்ட பிறகு கடலை மாவு மீதமாகி விட்டால் அதனுடன் மைதாமாவு, அரிசி மாவு, வெங்காயம், உப்பு சேர்த்து தோசை வார்த்தால் வித்தியாசமான சுவையில் இருக்கும்.
*கத்தரிக்காய்களை நறுக்கியதும் காம்புகளை எறிந்து விடாமல் சாம்பார் அல்லது ரசத்தில் போடலாம். சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com