சமையல்  டிப்ஸ்...

கத்தரிக்காய் கூட்டோ,  பொரியலோ  எது செய்தாலும் கொஞ்சம்  கடலை மாவைத் தூவி  5 நிமிடம்  கழித்து  இறக்குங்கள்.  மணம் கமகமவென்று  இருக்கும்.
சமையல்  டிப்ஸ்...

கத்தரிக்காய் கூட்டோ,  பொரியலோ  எது செய்தாலும் கொஞ்சம்  கடலை மாவைத் தூவி  5 நிமிடம்  கழித்து  இறக்குங்கள்.  மணம் கமகமவென்று  இருக்கும்.

கீரையை  வேக வைக்கும் தண்ணீரில்  கொஞ்சம் உப்பை சேர்த்து வேக வைத்தால் கீரையின் நிறமும் மணமும்  சூப்பர்.

சாப்பாத்திக்கு மாவு பிசையும்போது மாவுடன் பழம்  ஒன்று  சேர்த்து, பிசைந்து விட்டால்  சப்பாத்தி  மிருதுவாக  இருக்கும்.

புளிக்குழம்பு  செய்யும்போது கால் தேக்கரண்டி  வெந்தயம்  போட்டு  தாளித்தால்  கமகமக்கும்.

சாம்பாரில்  முருங்கைக்காயை  அப்படியே  நறுக்கி  போடாமல்  இரண்டாக  கீறி  போட்டால்  மணம்  சூப்பராக  இருக்கும்.

வெண்டைக்காயை  நறுக்கி,  கடலை மாவில் கலந்து எண்ணெய்யில்   பொரித்தால்  சுவையான  வெண்டைக்காய்  பஜ்ஜி ரெடி.

காய்கறியை மிகச் சிறிய  துண்டுகளாக  நறுக்காமல்  சற்று  பெரிய  துண்டுகளாக  வெட்டி  கூட்டோ,  குழம்போ  தயாரிக்கலாம்.

பருப்பை வேக வைக்கும்போது  1 தேக்கரண்டி  கடுகு எண்ணெய்  சேர்த்து  வேக வைத்தால்  பருப்பு  மிக விரைவில்  வெந்துவிடும்.

ஆப்பத்திற்கு மாவு கலக்கும்போது  ஒரு தேக்கரண்டி  கோதுமை மாவைச் சேர்த்தால்  ஆப்பம்  சீக்கிரம் காய்ந்து போகாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com