செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடிக்கலாமா? 

உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இ.கோலி (உ. இர்ப்ண்)  மற்றும்  சில பாக்டீரியாக்களை, செம்பில் உள்ள சத்துகள் அழித்துவிடும்.
செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடிக்கலாமா? 

உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இ.கோலி (உ. இர்ப்ண்)  மற்றும்  சில பாக்டீரியாக்களை, செம்பில் உள்ள சத்துகள் அழித்துவிடும். சுத்தமான நீரைப் பருக நினைப்பவர்கள், செம்புப் பாத்திரங்களில் தண்ணீரைச் சேமித்துப் பயன்படுத்துவது கண்டிப்பாக நல்ல பலனைத் தரும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

மைலின் (ம்ஹ்ங்ப்ண்ய்) என்ற உறைக்கு இடையே, மூளையில் உள்ள நரம்பு மண்டலங்கள், எப்போதும் தூண்டப்பட்டுக் கொண்டே இருக்கும். செம்புப் பாத்திரங்களின் மூலம் கிடைக்கப்பெறும் செம்புச் சத்துகள், மைலின் சுரப்பதற்கு துணைபுரியும் பாஸ்போலிப்பிடு (ல்ட்ர்ள்ல்ட்ர்ப்ண்ல்ண்க்ள்) உற்பத்திக்கு உதவுகிறது. இதனால், மைலின் வலுப்பெற்று, மூளையின் செயல்பாடு வேகம் பெறத் தொடங்கும். 

உடல் சூட்டினை சீராக வைக்கும் தன்மை செம்பில் இருக்கிறது. இதனால், கொழுப்புச் சத்தைக் குறைத்து, செரிமானக் கோளாறுகளை நீக்கும். மேலும், செம்புப் பாத்திரம் ஒன்றில் தண்ணீர் நிரப்பி வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிப்பது, உடல் இளைக்க வழிவகுக்கும்.

மெலனின் என்ற தோல்களுக்குத் தேவைப்படும் நிறமி உற்பத்திக்கு, செம்புச் சத்து முக்கியமான ஒரு காரணமாகும். செம்புப் பாத்திரங்களில் சேமித்து வைக்கும் தண்ணீரை அருந்தும்போது, மெலனின் உற்பத்தி அதிகரிக்கும். சுற்றுப்புறத் தாக்குதல்களில் இருந்து தோல் காக்கப்படும். புதிய செல்கள் உருவாகத்தொடங்கும். காயம் ஏற்பட்டிருப்பவர்களுக்கு, அந்தக் காயங்கள் ஆறும். மேலும் அந்த இடத்தில்  பளபளப்பான, புத்துணர்ச்சி நிறைந்த புதிய தோல்கள் உருவாகும்.

ஆக, நம் உடலைப் பொருத்தவரை  செல் உருவாக்கம் தொடங்கி, பல்வேறு தேவைகளுக்கும் செம்புச் சத்து தேவைப்படுகிறது.  செம்புச் சத்து அதிகமாகும்போது, ரத்தம் அதிகம் சுரக்கத் தொடங்கும். ரத்தச்சோகை பாதிப்பு இருப்பவர்கள், இதன்மூலம் அப்பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

செம்பின் முழு நன்மைகளைப் பெறவிரும்புபவர்கள், ஈயம் எதுவும் பூசாத செம்புப் பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆன்டி-பயாடிக் மற்றும் அழற்சிகளைக் குறைக்கும் சத்துகளைச் செம்பு கொண்டிருக்கிறது என்பதால், செம்பு கலந்த தண்ணீர் மூட்டுவலிகளைக் குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com