ஊறுகாய் அதிகம் சாப்பிடுபவரா? உஷார்

ஊறுகாயை தொடர்ந்து உட்கொண்டு வரும் போது, ஊறுகாயில் உள்ள சாறானது வயிற்றில் பிரச்னைகளை அதிகம் ஏற்படுத்தும்.  அடிவயிற்றில் வலி, பிடிப்புகள் மற்றும் சில சமயங்களில் வயிற்றுப் போக்கை கூட உண்டாக்கிவிடும்.
ஊறுகாய் அதிகம் சாப்பிடுபவரா? உஷார்

ஊறுகாயை தொடர்ந்து உட்கொண்டு வரும் போது, ஊறுகாயில் உள்ள சாறானது வயிற்றில் பிரச்னைகளை அதிகம் ஏற்படுத்தும்.  அடிவயிற்றில் வலி, பிடிப்புகள் மற்றும் சில சமயங்களில் வயிற்றுப் போக்கை கூட உண்டாக்கிவிடும்.

* ஊறுகாயில் மசாலா பொருட்கள் அதிக அளவில் சேர்ப்பதால், அவற்றை தொடர்ந்து எடுத்து வர, அல்சர் பிரச்னையை ஏற்படுத்தும்.

* ஊறுகாயில் அதிக அளவில் உப்பு இருப்பதால், ரத்த அழுத்தமும் அதிகரிக்கும், ஆகவே ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஊறுகாயை தவிர்ப்பது நல்லது.

*  கடைகளில் விற்கும் ஊறுகாயில் பதப்படுத்தும் ரசாயணங்கள்  சேர்க்கப்பட்டிருப்பதால், நீரிழிவு இருப்பவர்கள், ஊறுகாயை அறவே தவிர்க்க வேண்டும், இல்லாவிட்டால் மோசமான பின் விளைவுகளை 
சந்திக்கக் கூடும்.

* ஊறுகாயில் எண்ணெய் அதிகம் சேர்ப்பதால், அவை ரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவை அதிகரித்து இதய நோய்க்கு வழிவகுக்கும்.

* ஊறுகாயில் அதிக அளவிலான உப்பு சேர்க்கப்பட்டிருப்பதால், அவற்றை அன்றாடம் எடுத்து வரும் போது, அவை உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்திவிடும், இதனால் வயிறு எப்போதும் உப்புசமாக இருப்பது போன்ற உணர்வை உணரக்கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com