கருமை மறைந்து: உதடுகள் சிவப்பழகு பெற...?

உதடு காய்ந்திருக்கிறது என்று அடிக்கடி உதட்டை எச்சிலால் ஈரப்படுத்தக்கூடாது.
கருமை மறைந்து: உதடுகள் சிவப்பழகு பெற...?
  • உதடு காய்ந்திருக்கிறது என்று அடிக்கடி உதட்டை எச்சிலால் ஈரப்படுத்தக் கூடாது. எச்சிலில்  இருக்கும் பாக்டீரியா  உதட்டில் புண்களை ஏற்படுத்தும். மற்றும் உதட்டில் இருக்கும் கொஞ்சம் ஈரப்பதமும் மறைந்து வெடிப்பு உருவாகும்.
  • உதடு பாதிப்பு அடைய மற்றுமொரு காரணம் மேக்கப். எனவே உறங்கச் செல்லுவதற்கு முன்பு உதடுகளில் சுத்தம் செய்வது அவசியம். 
  • எலுமிச்சை பழத்தை நறுக்கி அதனைக் கொண்டு உதடுகளில் தடவும் போது இறந்த செல் நீங்கி புதிய செல் உருவாகுகின்றன. 
  • ஆரஞ்சுப் பழச்சாற்றை உதட்டில் தடவும் போது உதடு நிறம் மாறும்.
  • மாதுளம் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் அழகாகும். 
  • புதினா இலைகளை அரைத்து உதடுகளில் தடவினால் கிருமிகள் அழிந்துவிடும்.
  • கொத்துமல்லி இலைகளின் சாற்றை உதடுகளில் தடவினால் கருமை மறைந்து சிவப்பழகு கிடைக்கும்.
  • நெல்லிக்காய் சாறு உதடுகளில் தடவும் போது கருமை மறைந்து சிவப்பழகு பெறும். 
  • பீட்ரூட்சாறு உதடுகளில் உள்ள கருமையை விரைவில் மறைத்து விடும். 
  • ஜாதிக்காயை அரைத்து உதடுகளில் தடவினால் கருமை மறைந்து சிவப்பழகு கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com