மீண்டும்  துணிவுடன்  வருவேன்!   - பி.வி.சிந்து

ஒவ்வொரு அடியையும் கணக்கிட்டு எடுத்து வைத்து மீண்டும் துணிவுடன் விளையாட வருவேன் என்று கூறும் இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து கடந்த மூன்று மாதங்களாக ஊரடங்கு உத்தரவால்
மீண்டும்  துணிவுடன்  வருவேன்!   - பி.வி.சிந்து

ஒவ்வொரு அடியையும் கணக்கிட்டு எடுத்து வைத்து மீண்டும் துணிவுடன் விளையாட வருவேன் என்று கூறும் இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து கடந்த மூன்று மாதங்களாக ஊரடங்கு உத்தரவால் குடும்பத்தினருடன் வீட்டிலேயே முடங்கிவிட்டதால் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனதை பெரிய இழப்பாக கருதுகிறார்:

""இதுவரை சேர்ந்தாற் போல் நான் முடங்கி கிடந்தது இதுவே முதல் முறையாகும். இருப்பினும் பேட்மிட்டன் பயிற்சியையோ, உடற்பயிற்சியையோ நிறுத்தவில்லை. இது எனக்கு மட்டுமல்ல, என்னைப்போன்ற பல விளையாட்டு வீரர்களுக்கும் சோதனை காலமாக அமைந்துவிட்டது. எதிர்பாராத இந்த பொதுமுடக்கத்தால் தினசரி வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இது விளையாட்டு வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் உலக அளவில் ஏற்பட்டுள்ள நோய்த் தொற்றை கட்டுப்படுத்த, நம்முடைய நாட்டிலும் அரசு எடுக்கும் முடிவுகளுக்கு நாம் கட்டுப்பட்டாக வேண்டும்.

நான் பேட்மின்டன் பயிற்சி பெறும்போது, கூடவே என்னுடைய படிப்பையும் தொடர்ந்து படித்து முடிப்பேன் என்று என் பெற்றோரிடம் உறுதியளித்திருந்தேன். கல்வி முக்கியம் என்பது எனக்குத் தெரியும். எம்.பி.ஏ முடித்தபோது அது அவ்வளவு சுலபமல்ல என்று தெரிந்தது. பேட்மின்டன் பயிற்சியோடு, படிப்பிற்காக நான் கூடுதல் நேரம் ஒதுக்கினேன். கடினமாக உழைத்து வெற்றிப் பெற்றேன்.

மீண்டும் விளையாட களத்திற்கு செல்லும்போதும், பயணம் மேற்கொள்ளும்போதும், ஓட்டல்களில் தங்கும்போதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், பணியாளர்கள், பார்வையாளர்கள் அனைவரது உடல் நலனும் முக்கியமல்லவா?

கடந்த ஆண்டு சர்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து எழுந்த விமர்சனங்களுக்குப் பின் நான் தோல்வியை தழுவியது உண்மைதான். போட்டிகளில் இறுதிச் சுற்றுக்கு வருவதுதான் முக்கியம். பெண்கள் பேட்மின்டன் போட்டியில் யார் வேண்டுமானாலும் தன் திறமையை வெளிப்படுத்தி டாப் 10 வரிசையில் இடம் பெற முடியும்'' என்றார் பி.வி.சிந்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com