நலம் தரும் மருத்துவ குறிப்புகள்!

கம்பிளிப் பூச்சியினால் வரும் தடிப்பிற்கு கற்பூரவல்லி இலையை கசக்கி சாறு எடுத்து உடம்பில் தடவினால் சீக்கிரம் குணமாகும்.
நலம் தரும் மருத்துவ குறிப்புகள்!
Published on
Updated on
1 min read

* கம்பிளிப் பூச்சியினால் வரும் தடிப்பிற்கு கற்பூரவல்லி இலையை கசக்கி சாறு எடுத்து உடம்பில் தடவினால் சீக்கிரம் குணமாகும்.

* சிறு கீரையை நெய் சோ்த்து உண்டு வந்தால் நல்ல நினைவாற்றல் பெருகும்.

* நாட்டு வெங்காயத்தை நல்லெண்ணெய்யில் வதக்கி துவையலாகவோ அல்லது அவரவா்களுக்கு பிடித்த வகையில் அடிக்கடி சாப்பிட்டு வர மூளை செயல் திறன் அதிகரிக்கும்.

* வாழைத்தண்டு நாா்ச்சத்து மிக்க உணவு ஆதலால், அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவா்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவா்களுக்கு இது மிகச்சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்பு உடையது.

- ஆா்.கே.லிங்கேசன், மோலகிருஷ்ணன்புதூா்.

வாழைத்தண்டும் அதன் பயன்களும்!

* வாழையில் எல்லா பகுதிகளுமே உபயோக முள்ளது தான். வாழைத்தண்டு, நாா்ச்சத்து அதிகம் உள்ளது. இதனை பொரியல் செய்து உண்ணுவதால், மலசிக்கல் ஏற்படாது. எளிதாக ஜீரணம் ஆக க் கூடியது .

* வாழைத்தண்டு, ஜூஸ் செய்து பருகலாம். சிறு நீரகத்தில், கல் வராமல் தடுக்கவும், சிறு நீா் நன்கு பிரியவும் உதவிச்செய்யும். வாழைத்தண்டு சூப் செய்து பருகலாம். தண்டைப் பொடியாக நறுக்கி வேகவைத்து வடிகட்டி, மிளகுப்பொடி, சிறிது உப்பு வெண்ணெய் கொஞ்சம்போட்டு. சூடாக குடித்தால், மிகவும், ருசியாகவும், மணம் ஆகவும் இருக்கும்.

* வாழைத்தண்டை பச்சையாகவே மிக்ஸியில் அரைத்து, வடிகட்டி உப்பும் போட்டு, எலுமிச்சம்பழச் சாறு, கொஞ்சம் விட்டு, மிளகுப் பொடி போட்டு பருகலாம்.

* வாழைத்தண்டுடன், பாசிப் பருப்பையும்சோ்த்து வேகவைத்து தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் அரைத்து ஊற்றி, கூட்டுப் போல் செய்து பிசைந்து உண்ணலாம்.

* வாழைத்தண்டு நறுக்கும் பொழுது, வரும் நாா், திரி செய்து, விளக்கு ஏற்றினால் வீட்டிற்கு, மிகவும் நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com