குழந்தைகளை வளர்ப்பதும் ஒரு கலையே...

இன்றும் நமக்கு சவாலாக இருப்பது குழந்தை வளர்ப்பு முறை. இங்கு மிகப்பெரிய பிரச்னை என்னவென்றால் நாம் வேறு(பெற்றோர்) நம் குழந்தைகள் வேறு என்பதை கூட பலர் அறியாமல் இருப்பதே. குழந்தைகளிடம்
குழந்தைகளை வளர்ப்பதும் ஒரு கலையே...
Published on
Updated on
2 min read


இன்றும் நமக்கு சவாலாக இருப்பது குழந்தை வளர்ப்பு முறை. இங்கு மிகப்பெரிய பிரச்னை என்னவென்றால் நாம் வேறு(பெற்றோர்) நம் குழந்தைகள் வேறு என்பதை கூட பலர் அறியாமல் இருப்பதே. குழந்தைகளிடம் பெற்றோரின் விருப்பத்தை திணிப்பது தான் தற்போதைய பரிதாப நிலைக்கு பெரும் காரணமாக உள்ளது.

பொதுவாக குழந்தைகள் இயல்பாகவே குறிக்கோள்களை உடையவர்கள்.

உண்மை என்னவென்றால் குழந்தைகள் சில இயல்புகளுடன் சில புலன் உணர்வுடன் மட்டும் தான் பிறக்கின்றனர்.

சூழலின் காரணமாக நற்குணமுடையவர்களாகவோ,மோசமானவர்களாகவோ உருவாகின்றார்கள்.

குறிப்பாக தாயார் அல்லது வளர்ப்பாளர்களை சார்ந்துள்ளதாக உள்ளது என பெட்ரண்ட் ரஸல் கூறுவார்.பெற்றோர் குழந்தையை 4 முறைகளில் வளர்க்கின்றனர்.

1. மிகவும் கண்டிப்பானவர்கள்.
2. டால்பின் வளர்ப்பு முறை.
3. சுதந்திரமான வளர்ப்பு முறை.
4. சரியான முறையில் பங்கேற்காத வளர்ப்பு முறை.இதில் முதல்வகையானவர்கள்...

மிகவும் கண்டிப்பானவர்கள்(அ) சர்வாதிகார பெற்றோர். மிகுந்த எதிர்பார்ப்புகளைக் கொண்டு அதை குழந்தைகள் மேல் திணிக்க ஆரம்பித்துவிடுவார்கள். பெற்றோரின் கண்டிப்பு காரணமாக குழந்தைகள் தண்டனையில் இருந்து தப்பிக்க பொய்யர்களாக மாற வாய்ப்புள்ளது. சில குழந்தைகள் ஆக்ரோஷமாக கூட மாறுவதுண்டு.

இரண்டாம் வகை பெற்றோர்...

அதிகாரப்பூர்வ வளர்ப்பு முறை இவர்கள் நடுநிலையுடன் நடந்து கொள்வார்கள். குழந்தைகள் மேல் எதிர்பார்ப்பு வைத்திருந்தாலும், அது குழந்தைக்கு பிடிக்குமா? பலனளிக்குமா? என்று யோசித்து செயல்படுவார்கள். குழந்தை, பெற்றோர் இடையே ஒரு ஆரோக்கியமான உறவு இருக்கும். இந்த முறையில் வளர்க்கப்படும் குழந்தைகள் நேர்மறையான தன்மையுடன் வளர்க்கப்படுவார்கள். குழந்தைகள் சிறந்த முடிவெடுக்கும் திறனைப் பெற்றிருப்பார்கள்.

மூன்றாம்நிலைப் பெற்றோர்கள்...

சுதந்திரமான அனுமதி அளிக்கும் வளர்ப்பு முறை பெற்றோர், குழந்தையிடம் திறந்த மனதுடன் இருப்பார்கள். ஒரு நண்பனை போல பழகுவார்கள். இவர்கள் ஆதரவாக மட்டும் செயல்படுவார்கள். இந்த குழந்தை நடத்தை சிக்கலை சந்திக்கின்றனர். இந்த குழந்தைகள் படிப்பில்கூட பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

நான்காம்நிலைப் பெற்றோர்...

சரியான முறையில் எதையும் கண்டு கொள்ளாத வளர்ப்பு முறை. குறைந்த அக்கறை, குழந்தைக்கு என்ன தேவை என்பது கூட கண்டு கொள்ள மாட்டார்கள். இந்த கொள்கையில் பிடிவாதமாக வளர்ந்து நடத்தை சிக்கல்களை சந்திப்பார்கள்.

இதில் நீங்கள் எந்த வகை?

மோசமான பெற்றோருக்கு உண்டான பண்புகள்... தொடர்ந்து திட்டிக் கொண்டே  இருப்பது, தொடர்ந்து அறிவுரை கூறிக் கொண்டிருப்பது, குழந்தைகளுக்கு தண்டனை கொடுப்பது. குழந்தைகளுக்கு அன்பான முகத்தை காட்டாமல் இருப்பது, குழந்தைகளுக்கு அறிவுரைத் தேவைப்படும்போது கொடுக்காமல் இருப்பது, குழந்தைகள் அதிகமாக பாதுகாப்பது, குழந்தை கேட்கும் கேள்விகளை மதிக்காமல் இருப்பது, மற்ற குழந்தையோடு வேறுபடுத்திப் பார்ப்பது. பெற்றோர்கள் தான்  குழந்தைகளின் முதல் பல்கலைக்கழகம்.

கருவுற்ற நாளிலிருந்தே குழந்தை வளர்ப்பு முறை ஆரம்பமாகிறது. குழந்தை வளர்ப்புக்கு தேவையான பண்புகள்...

மதிப்புகள்.  நம்பிக்கை. கருணை. அமைதியான மனநிலை. சூழ்நிலையை கையாளும் மனநிலை. நேர்மறையான கருத்தில் எண்ணத்தை செலுத்துதல்.  உதவி செய்யும் மனநிலை வளர்த்தல். சத்தம் போட்டு பேசுவதைத் தவிர்த்தல்.வீட்டு வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துதல். சுயமாக முடிவெடுக்கும் தன்மையை அதிகப்படுத்துதல். நல்ல வழிகாட்டியாக இருத்தல். எந்த சூழ்நிலையிலும் நான் உனக்காக இருப்பேன் என்ற மனநிலை வளர்த்தல். பெற்றோர் (கணவன்}மனைவி)உறவை பலப்படுத்துதல். குழந்தை முன் சண்டை போடாமல் இருத்தல். ஒவ்வொரு குழந்தையின் ஆளுமையை பெற்றோர் அறிய வேண்டும்.
அந்த தனித்தன்மைக்கு ஏற்றார்போல் அவர்களை வளர்க்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையின் சிறப்பான திறமைகளை அறிந்து அதற்கேற்றாற்போல் ஊக்கமளித்து வளர்க்க வேண்டும்.

குழந்தையின் மேல் பெற்றோர் அதிகாரத்தை திணிக்க வேண்டாம். குழந்தைகள் உங்களை விட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல.உங்கள் முதல் குழந்தையின் வயது தான் உங்களின் உண்மையான வயது என்பதை மனதில் கொண்டு குழந்தைகளை வழிநடத்தவும்.


குழந்தைகள் வளர்ப்பு ஆலோசகர், திருப்பத்தூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com