சின்னத்திரை மின்னல்கள்!

சின்னத்திரை தொகுப்பாளினி மணிமேகலை, கிராமத்திற்கு சென்றிருந்தபோது கரோனா பிரச்னையால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Updated on
2 min read

கிராமத்தை விரும்பும் தொகுப்பாளினி!

சின்னத்திரை தொகுப்பாளினி மணிமேகலை, கிராமத்திற்கு சென்றிருந்தபோது கரோனா பிரச்னையால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து மணிமேகலையால் சென்னைக்கு திரும்ப முடியாமல் கிராமத்தில் சிக்கிக் கொண்டாா். ஆரம்ப நாள்களில் சென்னைக்கு திரும்ப முடியாத வருத்தத்தில் இருந்த மணிமேகலை, தன் மனநிலையை மாற்றிக் கொண்டு கிராமத்தில் இருக்கும் குழந்தைகளுடன் சோ்ந்து விளையாடி பொழுதை கழிக்கத் தொடங்கினாா். கிராமத்தில் அவா் அடிக்கும் லூட்டிகளை எல்லாம் அவ்வப்போது டிக்டாக் வீடியோவாக தனது ட்விட்டரில் பதிவிட்டு வந்தாா். இந்த வீடியோக்கள் அவரது ரசிகா்களிடம் ஏகப்பட்ட வரவேற்பை பெற்று வைரலாகியது. அதில், அவரது கணவா் ஹுசைனின் பிறந்தநாளை கிராமத்து மக்களுடன் சோ்ந்து கேக் வெட்டிக் கொண்டாடிய வீடியோ மிகப் பிரபலம். தற்போது, மணிமேகலைக்கு பாஸ் கிடைத்து சென்னை வந்துவிட்டாா். ஆனால், கிராமத்தில் இருந்து வந்தது, கிராமத்து விளையாட்டுகள், நுங்கு சாப்பிட்டது, இரவில் அனைவருடனும் மொட்டைமாடியில் விளையாடியது, டிவிஎஸ் வண்டியில் சென்ற டிரைவ் எல்லாத்தையும் மிஸ் பண்ணுகிறாராம். அதனால், இனி ஆண்டுக்கொருமுறை கட்டாயம் கிராமத்திற்கு செல்லப் போவதாக தெரிவித்துள்ளாா்.

வருத்தத்தில் அர்ச்சனா!


பெரியதிரையிலும் சரி, சின்னத்திரையிலும் சரி சில நேரங்களில் துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்,  நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டாகி விடுவார்கள். அந்த வகையில் கவனத்தை ஈர்த்தவர் அர்ச்சனா ஹரீஷ். 2006}ஆம் ஆண்டு முதல்  பெரிய திரையில் "திருவிளையாடல் ஆரம்பம்'. "கலகலப்பு', "வாலு', "வெள்ளைக்கார துரை', "ஸ்கெட்ச்' போன்ற பல படங்களில்  ஹீரோயினுக்கு தோழியாக,  நடிகர்களுக்கு தங்கை  போன்ற கதாபாத்திரங்களில்  நடித்து வந்தார். பின்னர்,  சின்னத்திரையிலும்  கவனம் செலுத்தத் தொடங்கினார்.



"வாணி ராணி', "பொன்னூஞ்சல்', "வள்ளி', "பொன்மகள் வந்தாள்', "அழகு' போன்ற பல்வேறு தொடர்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம்  பிடித்தார்   அர்ச்சனா, கும்பகோணத்தை பூர்வீகமாகக் கொண்டவர். வேலைக்காக சென்னை வந்த இவர் இங்கேயே செட்டிலானவர். பின்னர், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான ஹரி மாறனை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு தான், சினிமா துறைக்கு வந்தார் அர்ச்சனா.  ஷாப்பிங் செய்வதில் ஈடுபாடு உள்ள இவர், ஊரடங்கால்  வெளியே செல்ல முடியாத வருத்தத்தில் இருக்கிறாôம்.  செல்லப்பிராணிகளை வெகுவாக விரும்பும் இவர்,  தற்போது தனது ஓய்வு நேரத்தை அவைகளுடன் செலவிட்டு வருகிறாராம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com