பசும்பாலுக்கு இணையான பிற பால்கள்!
By - ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் | Published On : 12th August 2020 06:00 AM | Last Updated : 12th August 2020 06:00 AM | அ+அ அ- |

குழந்தைகளுக்கு எப்போதும் பசும்பால் கொடுப்பதுதான் நல்லது. பசும்பால் கிடைக்காதபோது, மாற்றாக கீழ்க்கண்ட பால்களையும் தரலாம். அவற்றிலும் நிறையச் ஊட்டச்சத்துகள் உண்டு. பெரியவர்களும் குடிக்கலாம்.
தேங்காய்ப்பால்
தேங்காயை உடைத்து துருவி பால் எடுத்து அதனை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இது ரத்த நாளங்களுக்கும், எலும்புகளுக்கும் மிகவும் நல்லது.
அரிசி பால்
அரிசியை ஊற வைத்து அரைத்து, பால் எடுத்து சாப்பிடலாம். இது உடலுக்கும் நல்லது. சிவப்பு அரிசியை அரைத்து பால் எடுத்தால் இன்னும் கூடுதல் சிறப்பு. பார்ப்பதற்கு நல்ல நிறத்தில் இருக்கும்.
சோயா பால்
உலர்ந்த சோயா விதைகளை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து பால் எடுத்து அனைவருமே அருந்தலாம். இதில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைவுதான்.
முந்திரி பால்
முந்திரி பருப்பை ஊற வைத்து அரைத்து பாலெடுத்து கொடுக்கலாம். கொலஸ்டிரால் சுத்தமாக கிடையாது. திசு மற்றும் எலும்பு உருவாக மிகவும் உதவியாக இருக்கும்.
பாதாம் பால்
பாதாம் பால் மற்ற பால் போன்றே தயாரித்து, சிறியவர், பெரியவர் அனைவரும் குடிக்கலாம். உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லது. உடலின் நோய் எதிர்ப்பு வலிமையைக் கூட்டும்.