கண்கள் பாதுகாப்புக்கு சில டிப்ஸ்..

கண்களின் இமைகளில் சுற்றி ஏற்படும் கட்டியை கரைக்க துளசி இலைச் சாற்றை பூசி வர வேண்டும்.
கண்கள் பாதுகாப்புக்கு சில டிப்ஸ்..

கண்களின் இமைகளில் சுற்றி ஏற்படும் கட்டியை கரைக்க துளசி இலைச் சாற்றை பூசி வர வேண்டும்.
• தேயிலைத் தூளை கொதிக்க வைத்து வெள்ளைத் துணியில் கட்டி கண்களின் மேல் வைத்து வந்தால் கருவளையம் நீங்கி கண்கள் குளிர்ச்சி பெறும்.
• கண்களை தினமும் பன்னீரால் துடைக்க கண்கள் புதுப்பொலிவு பெறும்.
• திரிபாலா சூரணத்தை சாப்பிட்டு வந்தாலும் கண்பார்வை நன்றாகயிருக்கும்.
• திரிபாலா சூரணத்தை ஒரு சிட்டிகை அளவு எடுத்து ஒரு கப் நீரில் இரவே கலந்து அந்த நீரைக் கொண்டு காலையில் கண்களைக் கழுவினால் கண்கள் நன்றாக ஒளிவீசும்.
• கண்களை இடது வலதாக, மேலும் கீழுமாக சுற்ற வேண்டும். இவ்வாறு ஐந்து முதல் ஆறு முறை செய்ய வேண்டும். பிறகு கண்களை இறுக மூடித்திறக்க வேண்டும். இவ்வாறு ஐந்து முறை செய்ய வேண்டும். இது கண்களுக்கு சிறந்த பயிற்சி. தெளிவான பார்வை கிடைக்கும்.
• பாதாம் பருப்புகளை பாலுடன் சேர்த்து நன்றாக அரைத்து கண்களைச் சுற்றி பேக் போடுவதால் கண்ணின் கருவளையம் மறையும்.
• கெமிக்கல் கலக்காத இரண்டு சொட்டு தூய்மையான தேங்காய் எண்ணெய்யை வாரம் ஒருமுறை கண்களில் விட்டுவர, கண்கள் நன்கு பிரகாசமாக இருக்கும்.
• சாதிக்காயை இழைத்து இரவில் கண்களைச் சுற்றி பூசி வந்தால் கருவளையம் விரைவில் மறையும்.
• வெள்ளரிக்காயை அரைத்தோ, வட்டமாக நறுக்கியோ கண்களின் மீதும். கண்களைச் சுற்றி பேக் போட்டு வர கண்ணிற்கு குளிர்ச்சியும், பிரகாசமும் கிடைக்கும்.
• கண்கள் பளபளப்பாகவும், பொலிவுடனும் இருக்க தினமும் இரவில் கண் இமைகளில் விளக்கெண்ணெய்யை, ஒன்று இரண்டு சொட்டுகள் விட்டு வர வேண்டும்.
அழகுக் குறிப்புகள் நூலிலிருந்து
- ஆர்.கே. லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com