லாஸ்லியாவுக்கு அடித்த ஜாக்பாட்

இலங்கையில் உள்ள "சக்தி' தொலைக்காட்சியில் செய்திதொகுப்பாளராக பணியாற்றி வருபவர் லாஸ்லியா. இவர் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "பிக் பாஸ் சீசன் 3' நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன்
லாஸ்லியாவுக்கு அடித்த ஜாக்பாட்
Updated on
1 min read

இலங்கையில் உள்ள "சக்தி' தொலைக்காட்சியில் செய்திதொகுப்பாளராக பணியாற்றி வருபவர் லாஸ்லியா. இவர் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "பிக் பாஸ் சீசன் 3' நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்றார். இந்நிகழ்ச்சியில், தனது திறமைகளை சரியாக பயன்படுத்தி இறுதி வரை பயனித்தார். பிக் பாஸ் முடிந்து தற்போது அதில் பங்கேற்ற ஒவ்வொரு பிரபலத்திற்கும் நல்ல வாய்ப்புகள் கிடைத்து வரும் நிலையில் லாஸ்லியா தற்போது தமிழில் "பிரண்ட்ஷிப்' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிப்பது குறிப்பிடதக்கது. மேலும் ஒரு கிரிகெட் வீரர் முதன்முதலில் முழு நீள கதாநாயகனாக நடிப்பது இந்திய சினிமாவில் இதுவே முதன்முறை என சொல்லப்படுகிறது. எனவே, முதல் வாய்ப்பே லாஸ்லியாவுக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது என்கின்றனர் இவரது ரசிகர்கள். இதனிடையே லாஸ்லியா தற்போது இரண்டாவதாக மேலும் ஒரு படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தில் ஆரி, லாஸ்லியா, சிருஷ்டி டாங்கே மற்றும் அபிராமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். இதனால் லாஸ்லியா அடுத்தடுத்து பரபரப்பாக பேசப்படுவாரா என்பதை பெருத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com