நலம் தரும் மருத்துவ குறிப்புகள்!
By - ஆர்.கே.லிங்கேசன், மோலகிருஷ்ணன்புதூர். | Published On : 10th March 2020 08:10 PM | Last Updated : 10th March 2020 08:10 PM | அ+அ அ- |

கம்பிளிப் பூச்சியினால் வரும் தடிப்பிற்கு கற்பூரவல்லி இலையை கசக்கி சாறு எடுத்து உடம்பில் தடவினால் சீக்கிரம் குணமாகும்.
சிறு கீரையை நெய் சேர்த்து உண்டு வந்தால் நல்ல நினைவாற்றல் பெருகும்.
நாட்டு வெங்காயத்தை நல்லெண்ணெய்யில் வதக்கி துவையலாகவோ அல்லது அவரவர்களுக்கு பிடித்த வகையில் அடிக்கடி சாப்பிட்டு வர மூளை செயல் திறன் அதிகரிக்கும்.
வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவு ஆதலால், அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்பு உடையது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...