சின்னத்திரை மின்னல்கள்!

பொதுவாகசின்னத்திரையைப் பொருத்தவரை, ஒரு தொடரில் நாயகியாக அறிமுகமான பிறகு, வேறு எந்த கதாபாத்திரத்தையும் அவ்வளவு எளிதில் அவர்கள் ஏற்பதில்லை.
சின்னத்திரை மின்னல்கள்!

வெள்ளித்திரையே இலக்கு!


பொதுவாகசின்னத்திரையைப் பொருத்தவரை, ஒரு தொடரில் நாயகியாக அறிமுகமான பிறகு, வேறு எந்த கதாபாத்திரத்தையும் அவ்வளவு எளிதில் அவர்கள் ஏற்பதில்லை. ஆனால், காயத்ரி ராஜ் அதற்கு விதிவிலக்கு. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "பேரழகி' தொடரின் மூலம் சின்னத்திரை நாயகியாக அறிமுகமானவர்.

அந்தத் தொடரை அடுத்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரேவதி, தலைவாசல் விஜய், ஸ்ருதி ராஜ் உள்ளிட்டோர் நடித்த "அழகு' தொடரில் மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்தார்.

இந்நிலையில் கரோனாவால் அந்தத் தொடர் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து தற்போது "அக்னி நட்சத்திரம்' தொடரில் அகிலா என்ற கதாபாத்திரம் மூலம் மீண்டும் வில்லியாக களமிறங்கியிருக்கிறார் காயத்ரி ராஜ்.

சென்னையைச் சேர்ந்த காயத்ரி, இளங்கலை கணிதம் பயின்றவர். இவரது திரைப்பயணம் தொடங்கியது, தனுஷின் "யாரடி நீ மோகினி' படத்தில்தான். பிறகு, "மான் கராத்தே', "மெட்ராஸ்', "இனிமே இப்படித்தான்', "மருது', "டோரா' என பல படங்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரையிலிருந்து சின்னத்திரைக்குள் வந்த காயத்ரிக்கு, ரசிகர்களிடம் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து விட்டு, மீண்டும் வெள்ளித்திரைக்குள் நுழைந்து வெற்றி பெற வேண்டும் என்பதே லட்சியமாம்.


திரைத்துறையில் பங்களிப்பு!


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு க.பாலசந்தரின் இயக்கத்தில் ஒளிபரப்பான "அமுதா ஒரு ஆச்சர்யக் குறி' என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர் கன்னிகா ரவி. அந்தத் தொடரின் மூலம் பெரியதிரையில் வாய்ப்புகள் வர, அடுத்தடுத்து "சரித்திரம் பேசு', "தேவராட்டம்', "சாட்டை' என பல திரைப்படங்களில் பிசியானார். இந்நிலையில் தற்போது திருமுருகனின் "கல்யாண வீடு' தொடரின் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பியிருக்கிறார் கன்னிகா.

இத்தொடரின் நாயகியாக நடித்து வந்த ஸ்பூர்த்தி கவுடாவுக்கு திருமணம் நிச்சயம் ஆனதால் அவரால் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது. இதனால் இத்தொடரின் வாய்ப்பு தற்போது கன்னிகாவுக்கு கிட்டியுள்ளது.

இதுகுறித்து கன்னிகா கூறுகையில், ""என்னைப் பொருத்தவரை, திரைத்துறை நான் விரும்பி ஏற்றுக் கொண்ட ஒன்று. இதில் தொகுப்பாளினியா, தொடரின் நாயகியா அல்லது பெரிய திரையா என்ற வித்தியாசம் எல்லாம் எனக்கில்லை. திரைத்துறையின் எல்லாப் பக்கங்களிலும் ஏதோ ஒரு வகையில் எனது பங்களிப்பு இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com