கேஸ் செலவை குறைக்க..!

கேஸ் ஸ்டவ்வை பற்ற வைக்கும் முன் சமைக்க வேண்டிய பொருட்களை சுத்தம் செய்து, நறுக்கி தயார் நிலையில் ஸ்டவ்வுக்கு அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.
கேஸ் செலவை குறைக்க..!

கேஸ் ஸ்டவ்வை பற்ற வைக்கும் முன் சமைக்க வேண்டிய பொருட்களை சுத்தம் செய்து, நறுக்கி தயார் நிலையில் ஸ்டவ்வுக்கு அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.

பிரஷர் குக்கரை சமையலுக்கு பயன்படுத்தினால் ஒவ்வொரு முறையும் ஐந்து முதல் எட்டு நிமிடம் வரை நேரம் மிச்சமாகும். ஆகையால் கேஸ் சேமிக்கப்படும்.காய்கறி, பருப்பு, சாதம் போன்றவற்றை ஒரே முறையில் வேக வைக்கலாம் என்பதால் காலை நேர பரபரப்புக்கு பிரஷர் குக்கரை பயன்படுத்துவதுதான் நல்லது.

நீலநிறத்தில் கேஸ் கனல் எரியாவிட்டால் பர்னரை சுத்தம் செய்ய சமயமாகிவிட்டது என்று புரிந்து கொள்ள வேண்டும். இளம் சிவப்பு, ஆரஞ்சு நிறத்தில் கேஸ் கனல் எரியும்போது கேஸýம் அநாவசியமாக வீணாகும்.

எப்பொழுது கேஸ் அடுப்பை அணைப்பதானாலும் சிலிண்டரை மூடிவிட்டு மேலே அணையுங்கள். இதனால் ஒவ்வொரு முறையும் டியூபில் இருக்கும் கேஸ் வீணாகாமல் இருக்கும் காஸýம் ஒருவாரம் அதிகமாக வரும்.

வேக வைக்கும் சமையல் பொருட்களில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் சேகரிப்பதாலும் கேஸ் வீணாகும் என்பதை மறந்து விடாதீர்கள்.

கேஸ் எரியவில்லை என்று சொல்லி கேஸ் வரும் பர்னரைக் குத்திக் குத்திப் பெரிது செய்து அடுப்பு சிவப்பாக எரிவதாலும் கேஸ் வீணாகும்.

தட்டையான அடிப்பாகங்கள் கொண்ட வாயகன்ற பாத்திரங்கள் சமையலுக்கும்
சிக்கனத்துக்கும் ஏற்றவை. சமைக்கும்போது பாத்திரங்களை மூடிவைத்து வேகவிட்டால் சமையல் வேலையை சீக்கிரமாக முடிக்கலாம். கேஸýம் அநாவசியமாக விரயமாகாது.

எந்தப் பொருளை கேஸ் அடுப்பில் சமைக்கும் போதும் கொதிநிலை வந்தவுடனே சிம் நிலையில் அடுப்பை எரியவிட்டால் போதுமானது. தொடர்ந்து ஹை அல்லது ஆன் நிலையில் எரியவிடுவதால் சமையலை சீக்கிரம் முடிக்க முடியாது. கேஸ்தான் வீணாகும். இதனால் சமைக்கும் உணவின் டேஸ்ட்டும் குறைந்து விடும்.

சமையல் பொருட்கள் வெந்தவுடன் கேஸ் அடுப்பின் தீயைக் குறைக்க வேண்டும். இச்செய்கையால் கேஸ் விரயமாவது தடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com