சாதம் வடித்த கஞ்சியில் இத்தனை நன்மைகளா?

ஒரு டம்ளர் சாதம் வடித்த கஞ்சியில் சிறிது மோர் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு குளிர்ச்சி. இதனுடன் சிறிதளவு புதினா, சீரகத்தூள் கலந்து குடித்தால் ஜீரணச் சக்தி பெருகும்.
சாதம் வடித்த கஞ்சியில் இத்தனை நன்மைகளா?

ஒரு டம்ளர் சாதம் வடித்த கஞ்சியில் சிறிது மோர் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு குளிர்ச்சி. இதனுடன் சிறிதளவு புதினா, சீரகத்தூள் கலந்து குடித்தால் ஜீரணச் சக்தி பெருகும்.

சாதம் வடித்த கஞ்சியை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

வடித்த கஞ்சியில் வைட்டமின்கள், தாதுக்கள் அதிகளவில் அடங்கி உள்ளன. இதனைப் பயன்படுத்தி ரசம் வைத்தும் சாப்பிடலாம். இட்லிமாவு அரைக்கும்போது இதனைக் கொஞ்சம் சேர்த்தால் இட்லி மிருதுவாக இருக்கும். சாதம் வடித்த கஞ்சியுடன் திராட்சைப் பழங்களைச் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வர, முகத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும்.

கால் வலியில் அவதிப் படுபவர்கள். சாதம் வடித்த கஞ்சியுடன் வெந்நீர், கல் உப்பு கலந்து மிதமான சூட்டில் கால்களை முக்கி வைத்தால் கால் வலி, வீக்கம் குறையும். இது நல்ல வலி நிவாரணியாக பயன்படும்.

சாதம் வடித்த கஞ்சி பசியைத் தூண்டும் தன்மையுடையது. இதனுடன் சிறிது சீரகம் கலந்து குடித்தால் சாப்பிட்ட உணவுகள் சீக்கிரம் ஜீரணம் ஆகும்.

முகம், கழுத்து, கைப் பகுதிகளில் சாதம் வடித்த கஞ்சியைத் தடவி சிறிது நேரம் வைத்திருந்து பின்னர் அலசி லர, விரைவில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்குவதை காணலாம்.

வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள் வடித்த கஞ்சியில் வெந்தயத் தூளையும் பனங்கற்கண்டையும் சேர்த்து குடிக்க சரியாகும்.

ஒரு காட்டன் துணியில் வடித்த கஞ்சியை நனைத்து சிரங்கு உள்ள இடங்களில் வைத்து கட்டிவந்தால் வரைவில் குணமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com