தில்லியின் முதல் பெண் மேயர்!

1909 -இல் ஹரியாணாவில் பிறந்தவர் அருணாஆஸப் அலி . இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மனவலிமை மிகுந்த போராளி. பிரிட்டிஷாரால் தலைக்கு விலைபேசப்பட்ட தீரப் பெண்மணி.
தில்லியின் முதல் பெண் மேயர்!


1909 -இல் ஹரியாணாவில் பிறந்தவர் அருணாஆஸப் அலி . இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மனவலிமை மிகுந்த போராளி. பிரிட்டிஷாரால் தலைக்கு விலைபேசப்பட்ட தீரப் பெண்மணி. இவரது சகோதரி பூர்ணிமா பானர்ஜியும் சுதந்திரப் போராட்ட வீராங்கனை. அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்.

1942 ஆகஸ்டு 8-இல் அகில இந்திய காங்கிரஸின் பம்பாய் மகாநாட்டில் "வெள்ளையனே வெளியேறு' தீர்மானம் நிறை வேறியதை அடுத்து, முக்கியத் தலைவர்கள் அனைவரும் கைதான போது, எதற்கும் அஞ்சாமல் மறுநாள் காங்கிரஸ் மகாநாட்டின் தலைமைப் பொறுப்பேற்றதோடு. காங்கிரஸ் கொடியை உயர்த்தி "வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தை தொடங்கி வைத்தவர். இதைத் தொடர்ந்து தலைமறைவான அருணா ஆஸப் அலியை பிடித்து தருபவருக்கு ரூபாய் 5,000 சன்மானமாக வழங்கப்படும் என்று பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1958 -இல் தில்லியின் முதல் மேயரானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com