நோபல் பரிசு பெற்ற மகளிர்!

உலகில் வழங்கப்படும் பரிசுகளில் மிக உயர்ந்த பரிசாகவும், மதிப்பு மிக்கதாகவும் இருப்பது நோபல் பரிசு.
நோபல் பரிசு பெற்ற மகளிர்!

உலகில் வழங்கப்படும் பரிசுகளில் மிக உயர்ந்த பரிசாகவும், மதிப்பு மிக்கதாகவும் இருப்பது நோபல் பரிசு. சுவீடன் நாட்டைச் சேர்ந்த வேதியியல் ஆராய்ச்சியாளரும், தொழிலதிபருமான ஆல்ஃபிரட் நோபல் என்பவரால் 1895-இல் எழுதி வைக்கப் பெற்ற உயிலின்படி, சிறப்புமிக்க ஆய்வு மேற்கொண்டவர்கள், மனித சமூகத்திற்குப் பெரிதும் பயன் தரும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டு
பிடித்தவர்கள், சமூகத்திற்குச் சிறப்பாகத் தொண்டாற்றி
யவர்கள், பொது அமைதிக்காகப் பாடுபடுபவர்கள் போன்றோருக்கு இந்த நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு
வருகின்றன.
ஆல்ஃபிரட் நோபல் உயிலில் குறிப்பிட்டிருந்ததை அடிப்படையாகக் கொண்டு 1900 -ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட நோபல் அறக்கட்டளை வழியாக, 1901-ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இயற்பியல், வேதியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல், அமைதி மற்றும் பொருளாதாரம் எனும் ஆறு பிரிவுகளில் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
1968- ஆம் ஆண்டில், சுவீடன் நாட்டுத் தேசிய வங்கியானது 300-வது ஆண்டைக் கொண்டாடிய நிலையில், நோபல் அறக்கட்டளைக்கு நிரந்தர வைப்புநிதி ஒன்றை ஏற்படுத்தி, அதன் வழியாகப் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினைத் தொடர்ந்து வழங்கிடக் கேட்டுக் கொண்டது. அதனைத் தொடர்ந்து, 1969- ஆம் ஆண்டு முதல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டு வருகிறது.
1901 முதல் 2019 வரை ஆறு பிரிவுகளிலும் சேர்த்து இதுவரை, தனிப்பட்ட நபர்களுக்கு 350 பரிசுகள், இருவருக்குக் கூட்டாக 141 பரிசுகள், மூவருக்குக் கூட்டாக 106 பரிசுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இப்பரிசுகளில் 923 தனி நபர்கள், 27 அமைப்புகள் என்றுமொத்தம் 950 பரிசுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

நோபல் பரிசு பெற்ற மகளிர்

நோபல் பரிசுகளில் இயற்பியல் - 3, வேதியியல் - 5, மருத்துவம் அல்லது உடலியங்கியல் - 12, இலக்கியம் - 15, அமைதி - 17, பொருளாதாரம் - 2 என்று மொத்தம் 54 பெண்கள் இப்பரிசுகளைப் பெற்றிருக்கின்றனர்.
இயற்பியலுக்கான பரிசினை 1903 -ஆம் ஆண்டில் போலந்து நாட்டைச் சேர்ந்த மேரி கியூரி, 1963 -ஆம் ஆண்டில் போலந்து நாட்டைச் சேர்ந்த மரியா கோப்பர்ட் மேயர், 2018- ஆம் ஆண்டில் கனடா நாட்டைச் சேர்ந்த டோனா ஸ்ட்ரிக்லேண்ட் என்று மூன்று பேர் பெற்றிருக்கின்றனர்.
வேதியலுக்கான பரிசினை 1911- ஆம் ஆண்டில் போலந்து நாட்டைச் சேர்ந்த மேரி கியூரி, 1935 ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஐரீன் ஜோலியட் கியூரி, 1964 - ஆம் ஆண்டில் எகிப்து நாட்டைச் சேர்ந்த டோரத்தி குரோபுட் ஹோட்கின், 2009 - ஆம் ஆண்டில் இஸ்ரேலைச் சேர்ந்த அடா ஈ. யோனாத், 2018- ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த பிரான்செஸ் எச். அர்னால்டு என்ற ஐந்து பேர் இப்பரிசினைப் பெற்றிருக்கின்றனர்.
மருத்துவம் அல்லது உடலியங்கியல் பிரிவில் 1947- ஆம் ஆண்டில் செக்கோஸ்லேவியாவைச் சேர்ந்த கெர்ட்டி கோரி, 1977 - ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த ரோசலின் யாலோ, 1983 - ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த பார்பாரா மெக்லிண்டாக், 1986 -ஆம் ஆண்டில் இத்தாலியைச் சேர்ந்த ரீட்டா லெவி - மோண்டால்சினி, 1988- ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த ஜெர்ட்ரூடு பி. எலியன், 1995- ஆம் ஆண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த கிறிஸ்டியான் நஸ்லின் வோல்கார்ட், 2004- ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த லிண்டா பி. பக், 2008 - ஆம் ஆண்டில் பிரான்சை சேர்ந்த பிரான்கோயிஸ் பாரி - சினோயூசி, 2009 - ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எலிசபெத் எச். பிளாக்பெர்ன் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த கரோல் டபிள்யூ கிரீடர், 2014 -ஆம் ஆண்டில் நார்வேயைச் சேர்ந்த மே பிரிட் மோசர், 2015- ஆம் ஆண்டில் சீனாவைச் சேர்ந்த டூ யூயூ என்று மொத்தம் பன்னிரண்டு பேர் இப்பரிசினைப் பெற்றிருக்கின்றனர்.
இலக்கியத்திற்கான பரிசினை 1909 - ஆம் ஆண்டில் சுவீடனைச் சேர்ந்த செல்மா லேஜர்லப், 1926 -ஆம் ஆண்டில் இத்தாலியைச் சேர்ந்த கிரேசியா டெலிட்டா, 1928- ஆம் ஆண்டில் டென்மார்க்கைச் சேர்ந்த சிக்ரிட் அண்ட்செட், 1938 - ஆம் ஆண்டில் பியர்ல் பக், 1945 -ஆம் ஆண்டில் சிலியைச் சேர்ந்த கபிரீலா மிஸ்ட்ரல், 1966- ஆம் ஆண்டில் ஸ்வீடனை சேர்ந்த நெல்லி சாக்ஸ் , 1991- ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நடின் கோர்டிமர், 1993- ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த டோனி மாரிசன், 1996- ஆம் ஆண்டில் போலந்தைச் சேர்ந்த விஸ்லவா சிசம்போர்ஸ்கா, 2004- ஆம் ஆண்டில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த எல்பிரீடு செல்னிக், ஐக்கிய ராச்சியத்தைச் சேர்ந்த டோரிஸ் லெஸ்ஸிங், 2009 - ஆம் ஆண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த ஹெர்டா முல்லர், 2013- ஆம் ஆண்டில் கனடாவைச் சேர்ந்த அலைஸ் முன்ரோ, 2015 -ஆம் ஆண்டில் உக்ரைனைச் சேர்ந்த ஸ்வெட்லனா அலெக்ஸிவிக், 2018 - ஆம் ஆண்டில் போலந்தைச் சேர்ந்த ஓல்கா டோகர்சக் என்று மொத்தம் பதினைந்து பேர் பெற்றிருக்கின்றனர்.
அமைதிக்கான பரிசினை 1905 -ஆம் ஆண்டில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த பெர்த்தா ஒன் சட்னர், 1931- ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த ஜேன் ஆதம்ஸ், 1946- ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த எமிலி கிரீன் பால்க், 1976 -ஆம் ஆண்டில் வட அயர்லாந்தைச் சேர்ந்த பெட்டி
வில்லியம்ஸ் மற்றும் வட அயர்லாந்தைச் சேர்ந்த மெய்ரீட் கோரிகான், 1979 -ஆம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த அன்னை தெரசா, 1982 -ஆம் ஆண்டில் சுவீடனைச் சேர்ந்த ஆல்வா மிர்டல், 1991-ஆம் ஆண்டில் மியான்மரைச் சேர்ந்த ஆங் சான் சூ கை, 1992 -ஆம் ஆண்டில் கவுதமாலா நாட்டைச் சேர்ந்த ரிகோபெர்டா மென், 1997- ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த ஜோடி வில்லியம்ஸ், 2003- ஆம் ஆண்டில் ஈரானைச் சேர்ந்த சிரின் எபாடி, 2004 -ஆம் ஆண்டில் கென்யாவைச் சேர்ந்த வங்காரி முதா மாதாய் , 2011- ஆம் ஆண்டில் லைபீரியா நாட்டைச் சேர்ந்த எல்லென் ஜான்சன் சர்லீப், லைபீரியா நாட்டைச் சேர்ந்த லெய்மா ஜிபோவி மற்றும் யேமன் நாட்டைச் சேர்ந்த தாவக்கோல் கர்மான், 2014- ஆம் ஆண்டில் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசாப்ஜாய் 17 வயதிலும், 2018 -ஆம் ஆண்டில் 25 வயதான ஈராக்கைச் சேர்ந்த நடியா முரட் ஆகிய பதினேழு பெண்மணிகளும் பெற்றிருக்கின்றனர்.
பொருளாதாரத்திற்கான பரிசினை 2009 - ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த எலினார் ஓஸ்ட்ராம், 2019-ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த எஸ்தர் டப்ளோ ஆகிய இரண்டு பெண்மணிகள் பெற்றிருக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com