கொள்ளு சாதம் 

அரிசியுடன் போதுமான அளவு நீர் சேர்த்து குக்கரில் உதிரியாக வடித்து எடுத்து வைக்கவும். கொள்ளுப் பருப்பை அவித்து எடுத்து நீரை வடித்து களைந்துவிடவும். பச்சைப்பட்டாணியை அவித்துக் கொள்ளவும்.
கொள்ளு சாதம் 

தேவையானவை:

பாசுமதி அரிசி - கால்கிலோ
கொள்ளு பருப்பு - 50 கிராம்
பச்சைப்பட்டாணி - 2 மேஜைக்கரண்டி
துருவிய கேரட் - 2 மேஜைக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - தலா 1 தேக்கரண்டி
நெய் - 4 தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
முந்திரி பருப்பு - 6
உலர் திராட்சை - 2 தேக்கரண்டி

செய்முறை:

அரிசியுடன் போதுமான அளவு நீர் சேர்த்து குக்கரில் உதிரியாக வடித்து எடுத்து வைக்கவும். கொள்ளுப் பருப்பை அவித்து எடுத்து நீரை வடித்து களைந்துவிடவும். பச்சைப்பட்டாணியை அவித்துக் கொள்ளவும். மிளகு, சீரகம் இரண்டையும் வெறும் வாணலியில் இட்டு வறுத்து தூளாக்கி எடுக்கவும். முந்திரிபருப்பு, உலர்திராட்சை இரண்டையும் சேர்த்து சிறிது நெய்யில் வறுக்கவும். ஒரு பாத்திரத்தில் உதிரியான சாதத்தை இட்டு, அவித்த கொள்ளு பருப்பு, பச்சை பட்டாணி, மிளகு சீரகத்தூள், கேரட் துருவல், இஞ்சி பூண்டு விழுது, முந்திரி, உலர்திராட்சை உப்பு மீதமுள்ள நெய் இவைகளைச் சேர்த்து, நன்கு கிளறி மூன்று நிமிடங்கள் குறைந்த தீயில் வேக வைத்து இறக்கவும். மனமும் சுவையுமான கொள்ளு சாதம் தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com