

பொதுவாக நாம் கால்கள் பராமரிப்பில் அவ்வளவாக கவனம் செலுத்துவதில்லை. இதனால் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் போன்றவை ஏற்பட்டு நமது கால்களின் அழகையே மாற்றிவிடுகின்றது. வீட்டில் இருக்கும் எளிய பொருள்களை கொண்டே இதனை எப்படி சரி செய்து கொள்வது என்பதை பார்ப்போம்:
2 தேக்கரண்டி ஆப்பிள் சீடர், வினிகர் 6 தேக்கரண்டி எடுத்து தண்ணீரில் கலந்து கொள்ளவும். பின்னர், ஒரு சிறிய காட்டன் துணியை பயன்படுத்தி அதில் தொட்டு கால்களில் கரும்புள்ளி உள்ள அனைத்து இடங்களிலும் தடவவும். இந்த செயல்முறையை தினமும் மேற்கொள்ளவும். அதற்கு பிறகு தோலுக்கு ஊட்டமளிக்கும் மாய்ஸ்சரைசரையும் பயன்படுத்துங்கள்.
2 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் 4 தேக்கரண்டி ஆலிவ்எண்ணெய்யை எடுத்து நன்றாக கலந்து பிறகு அவற்றை கால்களில் வடு உள்ள இடங்களில் மெதுவாக தேய்க்கவும். இதை மென்மையாக செய்யவும். பிறகு கால்களை சாதாரண நீரில் கழுவவும்.
ஒவ்வொரு நாளும் இதை தொடர்ந்து செய்ய வேண்டும்.
எலுமிச்சை சாற்றை உடலில் கருமையான இடங்கள் மற்றும் வடுக்கள் உள்ள பகுதிகளில் தடவி வர, கருமை மற்றும் வடுக்கள் சரியாகும்.
வெள்ளரிக்காயை தோல் நீக்கிவிட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் 2 தேக்கரண்டி ரோஸ் வாட்டரை சேர்க்கவும்.
இப்போது இந்த கலவையை பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேர்க்கவும். பின்னர் சாதாரண நீரில் அவற்றை கழுவவும். கருமையான இடங்கள் மற்றும் வடுக்களை சரி செய்யும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.