தலைமுடி அடர்த்தியாக வளர...

முடி வளர்ச்சி என்பது இன்று பலருக்கு ஏமாற்றம் தான். முடி வளர்ச்சியை எதிர்பார்க்கும் போது தலைமுடிக்கு உண்டாகும் சேதத்தை கடந்து செல்வது எளிதான விஷயமல்ல.
தலைமுடி அடர்த்தியாக வளர...
Published on
Updated on
1 min read

முடி வளர்ச்சி என்பது இன்று பலருக்கு ஏமாற்றம் தான். முடி வளர்ச்சியை எதிர்பார்க்கும் போது தலைமுடிக்கு உண்டாகும் சேதத்தை கடந்து செல்வது எளிதான விஷயமல்ல.

ஆனால் அதே நேரம் அதை எல்லாம் எளிதாக வெல்வதற்கு இயற்கை பொருள்கள் பலவும் நம்மிடம் நிறைந்து கிடக்கிறது. அவற்றில் ஆரோக்கியமாக உடலை வளர்க்கும் கீரைகளும் அடங்கும். இந்த கீரைகளைக் கொண்டு முடி வளர்ச்சியை துரிதப்படுத்துவது குறித்து பார்க்கலாம்.

கீரை ஹேர் பேக் - முடி வளர்ச்சிக்கு கீரைகள் - 1 கிண்ணம் (கலவை கீரைகளாகவும் இருக்கலாம்)

தேன் - 2 தேக்கரண்டி , ஆலிவ் அல்லது தேங்காய் அல்லது விளக்கெண்ணெய் - 1 தேக்கரண்டி கீரைகளை சுத்தம் செய்து தேவையான அளவு நீர் விட்டு மிக்ஸியில் மசித்தெடுக்கவும். கீரை ஓரளவு மசிந்தவுடன் கீரையில் தேன் மற்றும் எண்ணெய் சேர்த்து மீண்டும் அரைக்கவும்.

முதலிலேயே இதை சேர்த்தால் கீரை மசிவது சிரமமாக இருக்கும். இதை கூந்தலின் "ஸ்கால்ப்' முதல் நுனிவரை நன்றாக தடவி அரை மணி நேரம் வரை விட்டு விடுங்கள். மண்டைக்குள் நன்றாக ஊறட்டும்.

பிறகு அரை மணி நேரம் கழித்து சல்பேட் இல்லாத ஷாம்பு கொண்டு கூந்தலை அலசி எடுங்கள். வாரத்தில் இரண்டு முறை செய்தாலே போதும் கூந்தலுக்கு போதுமான வலு கிடைத்துவிடும்.

பலன்

இந்த கீரைகளில் கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, அரைக்கீரை, முருங்கைக்கீரை, கறிவேப்பிலை, புதினா போன்றவை இருக்கலாம். இதில் ஏதேனும் ஒன்று அல்லது கிடைப்பவற்றை நீங்கள் பயன்படுத்தலாம். 

தேன் தலைமுடிக்கு ஈரப்பதத்தையும் ஊட்டச்சத்தையும் தக்க வைக்க உதவுகிறது. இது ஆரோக்கியமின்றி இருக்கும் உச்சந்தலையை அமைதிப்படுத்தி வளர்ச்சியை ஊக்குவிக்க செய்கிறது. முடி வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com