சப்பாத்தி மீந்துவிட்டால்...

சப்பாத்தி அதிகமாக மீந்துவிட்டால்,  காய்ந்து வறண்டு விடும்.  அதனை பிய்த்து துண்டுகளாக்கி வெயிலில் நன்கு காய வைத்து எடுத்து  ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள் தேவையான பொழுது, அதிலிருந்து சிறிது
சப்பாத்தி மீந்துவிட்டால்...

சப்பாத்தி அதிகமாக மீந்துவிட்டால்,  காய்ந்து வறண்டு விடும்.  அதனை பிய்த்து துண்டுகளாக்கி வெயிலில் நன்கு காய வைத்து எடுத்து  ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள் தேவையான பொழுது, அதிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து, எண்ணெய்யில் பொரித்து சாப்பிடலாம். சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். 

அரிசி, பருப்பு, அரைத்து வைத்த மசாலா போன்றவற்றில் வெகு விரைவாக மழைக்காலத்தில் பூச்சிகள் வரத் துவங்கும். இதற்கு காய்ந்து போன கறிவேப்பிலை இலைகளை தூக்கி போடாமல் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு அதை இவற்றில் போட்டு வைத்தால் எந்த பூச்சிகளும், புழுக்களும் வராது பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.

பால் திரிந்து போகிறதா? வாங்கும் பால் இனி வீணாக்க வேண்டாம்! பால் காய்ச்சிய பின் அதில் நாலைந்து நெல் விதைகளை போட்டு வைத்தால் போதும், பால் திரியாமல் இருக்கும். அப்படி பால் திரிந்து விட்டால் பலரும் அதனை சாப்பிடக்கூடாது என்று நினைக்கிறார்கள். திரிந்த பாலை வடிகட்டி அதில் சர்க்கரை சேர்த்து தாராளமாக சாப்பிடலாம். வடிகட்டிய அந்த தண்ணீரில் வெள்ளி பாத்திரங்களை ஊற வைத்து தேய்த்தால், வெள்ளியில் இருக்கும் கறுத்த நிறம் எளிமையாக நீங்கி புதியது போல பளிச்சென மின்னும்.

பூண்டு பேஸ்ட் செய்யும் பொழுது பூண்டை உரிக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. தோலுடன் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் அரைத்தால் பூண்டு தோல் தனியாகவும், பூண்டு நன்கு அரைபட்டு கீழே அடியிலும் தங்கிவிடும். தோல் பகுதியானது ஜாரின் மூடியில் ஒட்டிக் கொண்டிருக்கும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து விடலாம். வேலையும், நேரமும் மிச்சம் ஆகிவிடும்.

சாம்பார், வத்தக்குழம்பு போன்ற குழம்பு வகைகளில் காரம் அதிகமாகி விட்டால் கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்க விடுங்கள். காரம் அடங்கி ருசியும் கூடும். இதுவே குருமா, சால்னா போன்ற கிரேவி குழம்பு வகைகளில் காரம் அதிகமாகி விட்டால் அதில் நல்லெண்ணெய்க்கு பதிலாக, வெண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். காரம் குறைந்து குருமாவின் ருசி 
கூடிவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com