மண்பாண்ட சமையலா? இதோ டிப்ஸ்...!

மண்பாண்டத்தில் சமைப்பதால் நிறைய நன்மைகள் இருக்கிறது. அது உணவை மெதுவாக வேக வைக்கிறது. அது மட்டுமல்லாமல், சமைக்கிற உணவுப் பொருளில் ஊட்டச்சத்தை தக்கவைக்கிறது.
மண்பாண்ட சமையலா? இதோ டிப்ஸ்...!
Updated on
1 min read

மண்பாண்டத்தில் சமைப்பதால் நிறைய நன்மைகள் இருக்கிறது. அது உணவை மெதுவாக வேக வைக்கிறது. அது மட்டுமல்லாமல், சமைக்கிற உணவுப் பொருளில் ஊட்டச்சத்தை தக்கவைக்கிறது. உணவுக்குள் உலோகம் செல்கிற ஆபத்தையும் தடுக்கிறது.

பொதுவாக, மண்பாண்டங்கள் வெப்பத்தை எதிர்க்கும் தன்மைக் கொண்டவை. இவை எண்ணெய் மற்றும் உணவிலுள்ள ஈரப்பதத்தை தக்க வைக்கும். அதனால், தேவையில்லாத கொழுப்பை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், மண்பாண்டங்களில் சமைப்பதற்கு முன்பாக அவற்றை தயார்படுத்த வேண்டும்.
மண்பாணையை தயார்படுத்துகிற வழிமுறைகளைப் பார்க்கலாம்:

மண்பாண்டங்களை சமையலுக்காக உபயோகிக்கும் முன் 8-10 மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மண்பாண்டங்களில் நுண் துளைகள் இருக்கின்றன. அதனால், தண்ணீரில் ஊற வைப்பதனால் ஈரப்பதத்தை உண்டாக்குகிறது. அது உணவை வேக வைப்பதற்கும் வெப்பத்தை தக்க வைக்கவும் உதவுகிறது. பிறகு மண்பாண்டத்தில் கூடுதலாக நீரை ஊற்றி அதனைக் கொதிக்க வைக்க வேண்டும். இப்போது மண்பாண்டம் பக்குவப்படுத்தப்பட்ட நிலையில் உபயோகப்படுத்த தயாராக உள்ளது.

மண்பாண்டங்களை சமைப்பதற்கு தயார்படுத்தும் முறை 2:

மண்பானையில் கொஞ்சம் கோதுமை மாவை போட்டு அதை எல்லா பக்கங்களிலும் தேய்க்கவும். மாவு தேய்ப்பதால் மண்பாண்டத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் மண் துகள்கள் உதிர்வதற்கு உதவுகிறது.

இந்த கூடுதலான மாவு மண்பாண்டத்தில் உள்ள தூசியை அகற்றுகிறது.

இப்போது பானையை அடுப்பில் வைத்து தீ மூட்டுங்கள். மாவு கருப்பு நிறமாக மாறும் வரை சூடாக்குங்கள். அடுத்து ஒரு மெல்லிய துணியால் பானையை சுத்தமாக துடையுங்கள்.

பானையின் வெப்பத்தை போக்குங்கள். பானை முழுவதுமாக குளிர வேண்டும். இப்போது பானை பயன்படுத்த தயாராக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com