ஆவாரம் பூ அடை

பருப்புகளை  ஒன்றாக ஒரு மணி  நேரம்  ஊற வைக்கவும்.  அவற்றுடன்  காய்ந்த மிளகாய்,  பூண்டு,  இஞ்சி, சோம்பு சேர்தது  நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
ஆவாரம் பூ அடை

தேவையானவை

ஆவாரம் பூ  -  1 கிண்ணம்
கோதுமை  ரவை  -  1 கிண்ணம்
வெங்காயம்  - 1
கொத்துமல்லித் தழை  - 1 கைப்பிடி அளவு
கடலைபருப்பு, உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு - தலா  200 கிராம்
காய்ந்த மிளகாய்  - 4
இஞ்சி  -  1 சிறு துண்டு
பூண்டு  -  4 பல்
சோம்பு  -  1 தேக்கரண்டி
உப்பு  - தேவைக்கேற்ப
எண்ணெய்  - 50  மில்லி

செய்முறை:   

பருப்புகளை  ஒன்றாக ஒரு மணி  நேரம்  ஊற வைக்கவும்.  அவற்றுடன்  காய்ந்த மிளகாய்,  பூண்டு,  இஞ்சி, சோம்பு சேர்தது  நைஸாக அரைத்துக் கொள்ளவும். பிறகு  கோதுமை ரவையைப்  ஒரு மணி  நேரம் ஊறவைத்து அரைத்த பருப்புக் கலவையுடன்  கலக்கவும்.  இதனுடன் நறுக்கிய வெங்காயம்,  ஆவாரம்பூ, கொத்தமல்லித்தழை,  உப்பு சேர்த்துக் கலக்கவும்.  தோசை தவாவில்  மாவை அடைகளாக  ஊற்றி,  எண்ணெய்விட்டு  இருபுறமும்  பொன்னிறமாகச் சுட்டெடுக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com