ப்ரோக்கோலி  ஃ ப்ரைட் ரைஸ் 

ப்ரோக்கோலி  ஃ ப்ரைட் ரைஸ் 

கேப்சிகம், வெங்காயம் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை துருவி வைக்கவும். அரிசியை போதிய அளவு நீரில் வேக வைத்து உதிரியாக வடித்துக் கொள்ளவும்.

தேவையானவை:

சிறிய அளவு ப்ரோக்கோலி - 1
பாசுமதி ரைஸ் - அரை கிலோ
கேரட் - 2
காப்சிகம் - 1
இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 2
பட்டை - சிறிய துண்டு
சோம்பு - 1தேக்கரண்டி
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
பிரிஞ்சி இலை - 2
முந்திரி பருப்பு - 8
உலர் திராட்சை - 2 தேக்கரண்டி
நெய் - 5 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மல்லித்தழை - சிறிதளவு
புதினா இலை - சிறிதளவு

செய்முறை:

கேப்சிகம், வெங்காயம் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை துருவி வைக்கவும். அரிசியை போதிய அளவு நீரில் வேக வைத்து உதிரியாக வடித்துக் கொள்ளவும். ப்ரோக்கோலியை சின்ன சின்னதாக நறுக்கி, முக்கால் பதத்திற்கு வேக வைத்து எடுத்து நீரை வடித்து விடவும். வாணலியில் சிறிது நெய்யை விட்டு கேரட், கேப்சிகம், வெங்காயம் இவற்றை வதக்கவும். இவற்றுடன் இஞ்சி பூண்டு விழுது பட்டை, சோம்பு, கிராம்பு பிரிஞ்சி இலை, ஏலக்காய் இவைகளை சேர்த்து வதக்கவும். கமகம வாசனை வந்ததும், இத்துடன் உதிரியான சாதம், அவித்த ப்ரோக்கோலி, உப்பு, நெய்யில் வறுத்த முந்திரி, உலர்திராட்சை, மல்லித்தழை, புதினா இலை, மீதமுள்ள நெய் இவைகளையும் சேர்த்து, நன்கு கிளறிக் கொடுத்து ஐந்து நிமிடத்தில் இறக்கவும். ப்ரோகோலி ஃ பிரைட் ரைஸ் ரெடி, இத்துடன் தயிர் பச்சடி, பொரித்த அப்பளம் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com