
தேவையானவை:
ப்ரோக்கோலி - 1
கடலைமாவு - 200 கிராம்
அரிசி மாவு - 100 கிராம்
வெங்காயம் - 3
பச்சைமிளகாய் - 3
இஞ்சி துருவல் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
உப்பு , எண்ணெய் - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
செய்முறை:
ப்ரோக்கோலியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாத்திரத்தில் கடலைமாவு, அரிசிமாவு இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். இத்துடன் நறுக்கிய ப்ரோக்கோலி, வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, சோம்பு, இஞ்சித் துருவல், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து நன்கு பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும், மாவுக் கலவையை சிறிது, சிறிதாக எடுத்து, விரல்களால் பிசறிவிட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். ப்ரோக்கோலி பக்கோடா தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.