ப்ரோக்கோலி  போண்டா 

ப்ரோக்கோலியை பொடியாக நறுக்கி, பாதிபதத்திற்கு வேக வைத்து எடுத்து நீரை வடித்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி, சிறிது எண்ணெய்யில் வதக்கிக் கொள்ளவும்.
ப்ரோக்கோலி  போண்டா 

தேவையானவை:

ப்ரோக்கோலி - 1
கடலை மாவு - 100 கிராம்
அரிசிமாவு - 50 கிராம்
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 5
கொத்துமல்லி - சிறிதளவு
சீரகம் - அரை தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையானவை
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க


செய்முறை:

ப்ரோக்கோலியை பொடியாக நறுக்கி, பாதிபதத்திற்கு வேக வைத்து எடுத்து நீரை வடித்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி, சிறிது எண்ணெய்யில் வதக்கிக் கொள்ளவும். கடலை மாவையும் அரிசி மாவையும் நீர்க்க கரைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். இத்துடன் வேக வைத்த ப்ரோக்கோலி வதக்கிய வெங்காயம், மிளகாய், சீரகம், நறுக்கிய கொத்துமல்லித்தழை, உப்பு இவைகளைச் சேர்த்து, கையால் நன்குப் பிசைந்து கொள்ளவும். கலவையை நடுத்தர உருண்டைகளாகப் பிடித்து, மாவில் தோய்த்து, நன்கு காய்ந்த எண்ணெய்யில் இட்டுப் பொரித்து எடுக்கவும். ப்ரோக்கோலி போண்டா தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com