நரம்புகள் வலுப்பெற உதவும் உணவுகள்!

ஊட்டச்சத்துக் குறைவான உணவுகளைச் சாப்பிடுவது அல்லது அதிகமாகச் சாப்பிடுவது இரண்டுமே நரம்புகளுக்கு நல்லதல்ல.
நரம்புகள் வலுப்பெற உதவும் உணவுகள்!
Published on
Updated on
1 min read

ஊட்டச்சத்துக் குறைவான உணவுகளைச் சாப்பிடுவது அல்லது அதிகமாகச் சாப்பிடுவது இரண்டுமே நரம்புகளுக்கு நல்லதல்ல. ஊட்டச்சத்து உள்ள உணவு சரிவர உடலுக்குக் கிடைக்கவில்லை என்றால், பெர்னீஷியஸ், அனீமியா எனும் ரத்தத்தை பாதிக்கும் நரம்பு நோய்  ஏற்பட வாய்ப்புள்ளது. 

வைட்டமின் பி 12 குறைவால் ஏற்படும் இந்த நோய் புற நரம்புகளில் வலுவைக் குறைய வைத்து, ஆரம்பத்தில் பாதம், கை, கால் எரிச்சல் எனத் தொடங்கி, தள்ளாட்டம், வலுக்குறைவு எனக் கொடுத்துவிடும்.

நரம்பு வலுப்பெறவும் நரம்பியல் நோய்கள் தீரவும் என்னென்ன சாப்பிடலாம் ?

நரம்பு மண்டலம் வலுப்பெற்றிருக்க பழங்கள் மிக அவசியம். தற்போது உலகமெங்கும் அதிகமாகி வரும் முதுமையில் வரக் கூடிய அல்சீமர் நோய் எனும் மறதி, வலுக்குறைவு, தடுமாற்றம் நமக்கு வராமல் இருக்க 40 வயதில் இருந்து தினமும் ஒரு முறை ஏதேனும் பழங்களை அவசியம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பொன்னாங்கண்ணிக்கீரை, மணத்தக்காளிக்கீரையை பகல் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நரம்புகள் வலுப்பெறும்.

இரவில் ஒரு சிட்டிகை சாதிக்காய் தூள் சாப்பிட்டு வந்தால் நரம்புகள் வலுப்பெற உதவுகிறது.

தேநீரில் லவங்கப்பட்டை போட்டுக் குடிப்பதன் மூலமாக நரம்புகள் பலம் பெறுகிறது.

நரம்பு பாதுகாப்புக்கு எல்லா உணவிலும் மஞ்சள் தூள், வெந்தயத்தை மறக்காமல் சிறிதளவாவது சேர்த்துக் கொண்டால் நரம்புகள் வலுவடையும்.

வயோதிகத்தில் நரம்பு வலுப்பெற அமுக்கிராங்கிழங்குப் பொடியை அரை தேக்கரண்டி அளவு பாலில் கலந்து, இரவில் 45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு வலுப்பெறும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com