மலையாளத்தில் ரம்யா பாண்டியன்!

மலையாளத்தில் ரம்யா பாண்டியன்!

பெரிய திரை... சின்னத்திரை என்று   வலம் வந்து கொண்டிருக்கும் பல நடிகைகள் இருந்தாலும்,  "கட் அவுட்'  வைக்கும் அளவுக்கு ரசிகர்களின் இதயத்தை தொட்டவர்  "பிக்பாஸ்'  புகழ் ரம்யா பாண்டியன் மட்டுமே. 
Published on

பெரிய திரை... சின்னத்திரை என்று வலம் வந்து கொண்டிருக்கும் பல நடிகைகள் இருந்தாலும், "கட் அவுட்' வைக்கும் அளவுக்கு ரசிகர்களின் இதயத்தை தொட்டவர் "பிக்பாஸ்' புகழ் ரம்யா பாண்டியன் மட்டுமே.

அவ்வப்போது விதம் விதமான தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை வலைதளங்களில் பதிவேற்றி ரசிகர்களை ஈர்த்து வரும் ரம்யா, நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து "நண்பகல் நேரத்து மயக்கம்' என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். தமிழிலும், இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தை மம்மூட்டியே தயாரிக்க, லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்குகிறார். ரம்யா, "நண்பகல் நேரத்து மயக்கம்' படத்தில் சாதாரணப் பெண்ணாக மேக்கப் இல்லாமல் நடிக்கிறார்.

இதுகுறித்து ரம்யா கூறுகையில், ""நான் நடித்த "ஜோக்கர்' படத்தை மம்மூட்டி சார் பார்த்திருக்கிறார். படத்தில் எனது நடிப்பு அவருக்கு பிடித்துப் போனதாம். அவர் சொந்தமாகப் படம் தயாரிக்கும் போது என்னை மறக்காமல், நடிக்க வைத்திருக்கிறார். அதற்கு முன் பட இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியுடன் அவரது குழுவினரையும் "ஜோக்கர்' படத்தைப் பார்க்கச் செய்துள்ளார். அவர்களும் ஓகே செய்ததால், இந்தப்படம் எனக்கு சாத்தியம் ஆனது.

இது, நான் முதன் முதலாக நடிக்கும் மலையாள படம், எனக்கு மலையாளம் தெரியாது. படக் குழுவினர் யாரையும் தெரியாது.

அறிமுகமும் இல்லை. ஆரம்ப நாட்களில் நான் மெளனமாக இருந்தேன். மம்மூட்டி சார் என்னிடம் தமிழில் பேசி எனது டென்ஷன்களைக் குறைத்தார். பிறகு வழக்கம் போல நடித்து முடித்தேன். படத்திற்காகப் பழனியில் குதிரை வண்டி சவாரி செய்தது புதிய அனுபவம் என்கிறார் ரம்யா.

"நண்பகல் நேரத்து மயக்கம்' பகலில் தூங்கி இரவில் கண்விழித்து திருடும் திருடனின் கதையாம். அந்த திருடனின் மனத்தைத்திருடும் காதலியாக ரம்யா இதில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்தப்படத்தின் மூலம் ரம்யாவுக்கு மலையாள திரையுலகம் வாய்ப்புகளை அள்ளித்தரும் என நம்புகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com