
துவரம் பருப்புடன் முருங்கைப் பூவை சேர்த்துக் கூட்டு செய்து சாப்பிட்டால் உடல் வலுவடையும். நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
தினமும் சிறிதளவு அரிசி திப்பிலியை சாப்பிட்டால் கபம் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். இரைப்பை வலுப்பெறும்.
மூன்று நாட்களுக்கு ஒரு முறை கர்ப்பிணிப் பெண்கள் கொண்டைக் கடலையைச் சுண்டல் செய்து சாப்பிட்டால் சுகப்பிரசவம் ஏற்படும்.
சுளுக்கு உள்ள இடத்தில் தேங்காய் எண்ணெய்யில் சிறிது கற்பூரத்தை தூள் செய்து போட்டு சூடு பறக்கத் தேய்தால் சுளுக்கு உடனே குணமாகும்.
கொழுந்து வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி நன்றாக அரைத்து நகச்சுத்தி உள்ள இடத்தில் கட்டினால் நகச்சுத்தி குணமாகிவிடும்.
ஒரு டம்ளர் வேகவைத்த முட்டைக்கோஸ் நீரை தினமும் குடித்து வந்தால் குடல் புண் ஆறி விடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.