மேனியை பளபளப்பாக்கும் 'பிளம்ஸ்'

ஆங்கிலத்திலும், தமிழிலும் "பிளம்ஸ்' என்று அழைக்கப்படும் இந்தப் பழத்திற்கு கொத்துப்பேரி என்று இன்னொரு பெயரும் உண்டு.
மேனியை பளபளப்பாக்கும் 'பிளம்ஸ்'
Published on
Updated on
1 min read


ஆங்கிலத்திலும், தமிழிலும் "பிளம்ஸ்' என்று அழைக்கப்படும் இந்தப் பழத்திற்கு கொத்துப்பேரி என்று இன்னொரு பெயரும் உண்டு.

இதில் புரதம், நார்ப்பொருள், மாவுப்பொருள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மெக்னீசியம், தயாமின், நியாசின், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், சோடியம், வைட்டமின்கள் பி, சி முதலியன உள்ளன.

குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும், பெரியவர்களின் எலும்பு பலத்திற்கும் தேவையான கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் உள்ளன.

பிளம்ஸ் பழத்தில் ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள் அதிகம் இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உடையது.

இதை ஜூஸ் செய்து குடித்து வர மேனியை பளபளப்பாகும்.

மனச்சோர்வை, மன இறுக்கத்தைப் போக்கும் ஆற்றல் கொண்டது இப்பழம்.

பிளம்ஸ் பழத்தை அப்படியே கடித்து சாப்பிட வேண்டும். இதனால் இதிலுள்ள சத்துகள் முழுமையாக உடலில் சேர்ந்து நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

இதில் கணிசமாக இரும்பு சத்து உள்ளதால், ரத்த விருத்தி ஏற்படும். சோகை நோய் உள்ளவர்க்கு மிகவும் நல்லது.

பொட்டாசியம் இதில் இருப்பதால் நுரையீரலை சுத்தப்படுத்தும் டானிக் போன்று செயல்படும். சுவாசக் கோளாறும் ஏற்படாது காக்கும்.

இருதயத்தை சீராக, இயக்கும் தன்மை கொண்டது பிளம்பழம். இருதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com