கேரட்  கொச்சி 

பாசிப்பருப்புடன் மஞ்சள் தூள், போதுமான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரில் குழைய வேக வைக்கவும்.  கேரட்,  உருளைக்கிழங்கு, வெங்காயம்,  தக்காளி,  பச்சை  மிளகாயைப்  பொடியாக  நறுக்கிக் கொள்ளவும்.
கேரட்  கொச்சி 
Updated on
1 min read


தேவையானவை:

பாசிப் பருப்பு  - அரை கிண்ணம்
கேரட்  - 250 கிராம்
உருளைக்கிழங்கு  - 1
தக்காளி - 3
பெரிய  வெங்காயம்  - 1
பச்சை மிளகாய்  -4
கறிவேப்பிலை  - சிறிது
கொத்துமல்லித்தழை  -  சிறிதளவு
 மஞ்சள் தூள்  -  அரை தேக்கரண்டி
உப்பு  - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு -  1தேக்கரண்டி
பெருங்காயத் தூள்  - 1சிட்டிகை

செய்முறை:

பாசிப்பருப்புடன் மஞ்சள் தூள், போதுமான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரில் குழைய வேக வைக்கவும்.  கேரட்,  உருளைக்கிழங்கு, வெங்காயம்,  தக்காளி,  பச்சை  மிளகாயைப்  பொடியாக  நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில்  எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், சேர்த்துத் தாளித்து,  நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.

பிறகு,  கேரட், உருளைக்கிழங்கு,  உப்பு சேர்த்து  நன்கு வதக்கவும்,  அதில்  வெந்த பாசிப்பருப்பு,  2 கப்  தண்ணீர்  சேர்த்துக் கொதிக்க  விடவும். பச்சை வாசனைப் போக,  கொதித்ததும்  அடுப்பிலிருந்து இறக்கி  கொத்துமல்லித் தழை  தூவி பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com