கடப்பா சம்பார் முதல்  தஞ்சாவூர் கொத்சு வரை

கடப்பா சம்பார் முதல் தஞ்சாவூர் கொத்சு வரை பல வகையான உணவுகள்..
கடப்பா சம்பார் முதல்  தஞ்சாவூர் கொத்சு வரை
Published on
Updated on
2 min read

கடப்பா சாம்பார் 
தேவையானவை:
பாசிப்பருப்பு - ஒரு கிண்ணம்
பச்சைப் பட்டாணி, நறுக்கிய பீன்ஸ்,
தோல் சீவி நறுக்கிய உருளைக்கிழங்கு (சேர்த்து) - ஒரு கிண்ணம்
தேங்காய்த் துருவல் - கால் கிண்ணம்
பச்சை மிளகாய் - 5 (அல்லது காரத்துக்கேற்ப)
வெங்காயம் - ஒன்று
பொட்டுக்கடலை - 5 தேக்கரண்டி
எலுமிச்சைப் பழம் - ஒன்று
பூண்டு - 5 பல்
கசகசா - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - சிறிதளவு
கடுகு, கிராம்பு, பட்டை - தேவையான அளவு
நறுக்கிய கொத்துமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: தேங்காய்த் துருவலுடன் பச்சை மிளகாய், பூண்டு, கசகசா, பொட்டுக்கடலை சேர்த்து விழுதாக அரைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்புடன் மஞ்சள்தூள், பச்சைப் பட்டாணி, நறுக்கிய பீன்ஸ், உருளைக்கிழங்கு துண்டுகள், தேவையான நீர் சேர்த்து வேகவைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கிராம்பு, பட்டை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்து வைத்த விழுது, உப்பு சேர்த்து ஒரு கொதி விடவும். பின்னர் வேகவைத்த பாசிப்பருப்பு கலவையை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு... சாம்பார் பதம் வந்ததும், மேலும் கொதிக்கவிட்டு இறக்கவும். எலுமிச்சைச் சாறு, சுத்தம் செய்த கொத்துமல்லித்தழை சேர்க்கவும். இதை இட்லி, தோசையுடன் பரிமாறலாம்.

 பட்டணம் பக்கோடா 


தேவையானவை: 
அரிசி மாவு - 2 கிண்ணம்
கடலை மாவு - ஒரு  கிண்ணம்
இஞ்சித் துருவல் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)
நெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, 
இஞ்சித் துருவல், உருக்கிய சூடான நெய், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்துக் கலந்து சிறிதளவு தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசையவும். வாணலியில் எண்ணெய்யைக் காயவிட்டு, பிசைந்த மாவை சிறிது சிறிதாக பக்கோடா போல கிள்ளிப் போட்டு, பொரித்து 
எடுத்தால்... பட்டணம் பக்கோடா தயார்.

 கறிவேப்பிலைப் பொடி 


தேவையானவை: 
கறிவேப்பிலை - ஒரு கிண்ணம்
மிளகு, சீரகம் - தலா 50 கிராம்
பெருங்காயம், உப்பு - தேவையான அளவு
செய்முறை: வெறும் வாணலியில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தை தனித்தனியே வறுத்து ஆறவிடவும். பிறகு, தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸôக பொடிக்கவும்.
குறிப்பு: இது, அஜீரணப் பிரச்னையில் இருந்து நிவாரணம் அளிக்கும். சூடான சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியில் சிறிதளவு போட்டு பிசைந்து சாப்பிடலாம்.

 தஞ்சாவூர் கொத்சு 


தேவையானவை: 
வெங்காயம் - 2
தக்காளி - 5
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் - 4
தனியா, கடலைப்பருப்பு - தலா ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
உளுந்தம்பருப்பு, கடுகு - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை -  1கொத்து 
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: காய்ந்த மிளகாய், தனியா, கடலைப்
பருப்பை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். புளியை ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உளுந்தம்பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கி... புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். புளியின் பச்சை வாசனை போன பின்பு வறுத்து அரைத்த பொடியை சேர்த்து, ஒரு கொதி வந்த உடன் இறக்கவும். இது... பொங்கல், உப்புமாவுக்கு சூப்பர் காம்பினேஷன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com