திராட்சைப் பழத்தின் நன்மைகள் !

வைட்டமின் பி1, பி2, பி12, வைட்டமின் சி ,  பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துகள் திராட்சையில் நிறைந்துக் காணப்படுகிறது.
திராட்சைப் பழத்தின் நன்மைகள் !


வைட்டமின் பி1, பி2, பி12, வைட்டமின் சி ,  பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துகள் திராட்சையில் நிறைந்துக் காணப்படுகிறது.

➜திராட்சைச்சாறு  அடிக்கடி அருந்தி வந்தால், பித்தம் தணியும். உடல் வறட்சி நீங்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தி புதிய ரத்தத்தை ஊற வைக்கும் ஆற்றல் இதற்குண்டு. 

➜நரம்புகளுக்கு வலுவை அளிக்கவல்லது. இதனால் மூளையும், இதயமும் வலிமை பெறும்.

➜உஷ்ணத்தினால் உடலில் நமைச்சல், சிறுநீர் தாரையில் எரிச்சலும், சொட்டுச்சொட்டாக நீர்பிரிதலும் இருந்தால் திராட்சைப் பழச்சாறு அதைப் போக்கும்.

➜ரத்தசோகைக்கு இது கைக்கண்ட  மருந்தாகும். குடல் புண்னை ஆற்றும். களைப்பை போக்கி ஆழ்ந்த உறக்கத்தை அளிக்கும். நுரையீரலை பாதுகாக்கும் ஆற்றல் கொண்டது.

➜சீரற்ற மாதவிடாய்  பிரச்னைகளை  சரி செய்யும் தன்மை திராட்சைச்சாறுக்கு உண்டு.  மேலும்,  மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்று வலியையும்  போக்கும்.

➜சளிப்பிடித்திருக்கும் போது, ஆஸ்துமா நோயுள்ளவர்கள், வாத உடம்புக்காரர்கள் அதிக அளவில் திராட்சைச் சாறு எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நலம்.

➜"காய், கனி, கீரை மருத்துவக் குறிப்புகள்' என்னும் புத்தகத்திலிருந்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com