சுரைக்காய் சாறின் நன்மைகள்!

இனிப்பு மற்றும் பிற சுவையை கொண்ட பழ வகைகளில் பழச்சாறுகள் தயாரித்து குடிக்க பலரும் விரும்புவார்கள். ஆனால், காய்கறிகளில் இனிப்பான சுவை இல்லாததால், பெரும்பாலானோர் இதனை தவிர்த்து விடுகின்றனர்.
சுரைக்காய் சாறின் நன்மைகள்!


இனிப்பு மற்றும் பிற சுவையை கொண்ட பழ வகைகளில் பழச்சாறுகள் தயாரித்து குடிக்க பலரும் விரும்புவார்கள். ஆனால், காய்கறிகளில் இனிப்பான சுவை இல்லாததால், பெரும்பாலானோர் இதனை தவிர்த்து விடுகின்றனர்.

காய்கறிகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்களால் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது. சுரைக்காயை சாறுபோல செய்து குடித்தால், ஏற்படும் நன்மைகள் என்ன? 

சுரைக்காய் சாறை குடித்தால் சருமத்தின் செல்கள் வயதாகும் போது ஏற்படுத்தும் சுருக்கமான தோற்றத்தை மாற்றியமைக்கும். சுரைக்காயில் இருக்கும் வைட்டமின் சி, துத்தநாகம் முதுமையை குணப்படுத்த உதவுகிறது. 

சுரைக்காய் சாறில் இருக்கும் வைட்டமின்கள், தாதுப்பொருட்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள் போன்றவையால் இயற்கையாகவே முகத்தில் பளபளப்பு தன்மை கிடைக்கும். உடலின் செயல்பாடுகள் சீராகி, சருமத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும். 

காலை எழுந்தவுடன் கண்களில் வீக்கம் இருந்தால், சுரைக்காய் சாறினை பருகலாம். இது சருமத்தை குளிரூட்டி, கண்களின் வீக்கம் பிரச்சனையை சரி செய்கிறது. சுரைக்காய் துண்டுகளை வீங்கிய கண்கள் மீது வைத்து முகத்தை கழுவலாம். 

சுரைக்காய் சாறை அருந்துவதால் கூந்தல் பராமரிக்கப்படும். முடி நரைக்கும் பிரச்சனை தடுக்கும். சருமத்தில் இருக்கும் அழுக்குகள், நச்சுக்கள் போன்றவற்றை அப்புறப்படுத்துகிறது. முகப்பரு பிரச்னையை சரி செய்யலாம். எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் சுரைக்காய் சாறை பருகலாம். 

இதுமட்டுமல்லாது இரத்தத்தை சுத்திகரித்து, சருமம் மிருதுவாக மாறுவதற்கு வழிவகை செய்கிறது. உடலின் உள்ளுறுப்புகளையும் சுத்திகரித்து, உடலுக்கு நன்மையை ஏற்படுத்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com