சமையல் டிப்ஸ்

பருப்பு உருண்டை குழம்பு தயாரிக்கும் போது உருண்டை கரையாமல் இருக்க வேண்டுமானால் ஒரு தேக்கரண்டி அரிசி மாவை உருண்டையுடன் உருட்டிப் போட வேண்டும்.
சமையல் டிப்ஸ்

பருப்பு உருண்டை குழம்பு தயாரிக்கும் போது உருண்டை கரையாமல் இருக்க வேண்டுமானால் ஒரு தேக்கரண்டி அரிசி மாவை உருண்டையுடன் உருட்டிப் போட வேண்டும்.

வெஜிடபிள் பிரியாணி, ப்ரைட் ரைஸ் போன்றவை செய்யும் பொழுது, 1 பீட் ரூட்டை குக்கரில் தனியாக வேக வைத்து எடுத்து பிரியாணி ரெடியானவுடன் சிறு சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு கலந்து பாருங்கள். பிரியாணி அல்லது ப்ரைட் ரைஸ் அழகான கலரில் இருக்கும். மற்ற காய்களுடன் பீட்ரூட்டையும் சேர்த்துப் போட்டுச் செய்தால் அதன் கலர் மாறி விடுவதுடன் பிரியாணியின் நிறமும் மாறிவிடும் பீட்ரூட்டை இது போல் கடைசியில் சேர்ப்பதால் சுவையும் கூட கூடுதலாக இருக்கும்

பாகற்காய் பொரியல் செய்யும் போது முளைக்கீரை, அரைக்கீரை என ஏதாவது ஒரு கீரையை பொடியாக நறுக்கி பாகற்காயுடன் சேர்த்து வதக்கி சாப்பிட்டு பாருங்கள். சிறிது கூட கசக்காது கீரையும், பாகையும் சேர்ந்து நல்ல மணமாகவும் இருக்கும்

மசால் வடை செய்யும் போது அரைத்த மாவில் அரைமணி நேரம் ஊறிய ஒரு பிடி ஜவ்வரிசியையும், ஒரு பிடி பயற்றம்பருப்பையும் பிழிந்து போட்டுக் கலந்து வடை தட்டுங்கள் மொறு மொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும்

முட்டைக் கோûஸ வேக வைக்கும் போது ஒரு துண்டு இஞ்சி சேர்ந்தால் கெட்ட வாடை வராது

சில சமயம் இட்லி, உளுந்து விழுது காணாமல் கல் மாதிரி இருக்கும். மாவில் 2 ஸ்பூன் நல்லெண்ணைய் விட்டு கலந்து பின் இட்லி வார்த்தால் மெதுவாக சுவையாக இருக்கும்

வற்றல் குழம்பு (காரக் குழம்பு) செய்யும் பொழுது ஒரு துண்டு சுக்கு, ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை, பல் பூண்டு சேர்த்து அரைத்து, கொதிக்க வைத்து இறக்கி வெங்காய வடகத்தை நெய் விட்டு தாளித்துக் கொட்டினால் வத்தக் குழம்பினால் வீடே மணக்கும்

மோர் மிளகாய்க்கு மிளகாயை மோரில் ஊற வைக்கும் பொழுது, அத்துடன் ஒரு சில பாகற்காயையும் வட்டமாக நறுக்கி ஊறவைத்து, பின் காயவைத்து எடுங்கள். இதனால் மிளகாயில் காரம் அதிகம் இல்லாமல் இருக்கும், பாகற்காயும் கசக்காது

கீரை வேக வைத்த தண்ணீரோடு சோறு வடித்த தண்ணீரையும் சிறிது உப்பு, மிளகையும் கலந்து குடிக்க சத்தான சூப் தயார்.

வாடிய பீன்சை சிறிது நேரம் குளிர்ந்த தண்ணீரில் போட்டெடுத்து பிறகு சமையல் செய்தால் வாடாத பீன்சை போலவே சுவையாக இருக்கும்.
தொகுப்பு: எம். ஏ. நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com