பட்சண டிப்ஸ்...

பாதுஷா மற்றும் பாம்பே காஜா செய்து மேலே உலர்ந்த கலர் கொப்பரையை தூவுவோம்.
பட்சண டிப்ஸ்...

பாதுஷா மற்றும் பாம்பே காஜா செய்து மேலே உலர்ந்த கலர் கொப்பரையை தூவுவோம். ஆனால், அது உதிர்ந்துவிடும். இதைவிட சர்க்கரைப் பாகில் கொப்பரையைப் போட்டுக் கிளறிய பின் அதில் பாதுஷா, காஜா, நொக்கல் இவற்றைத் தோய்த்துப் போட கொப்பரை, ஸ்வீட்டின் எல்லாப்புறமும் ஒட்டிக் கொண்டு மிகவும் அழகாக இருக்கும்.

பட்சணத்துக்கு கடலைமாவு காய வெயில் இல்லை என்ற கவலை வேண்டாம். வாணலியை நன்றாக சூடாக்கி அடுப்பை அணைத்துவிட்டு கடலை பருப்பை அதில் ஐந்துநிமிடம் பிரட்டி மிஷினில் திரிக்க வேண்டும்.

தேங்காய் பர்ஃபி வெள்ளே வெளேரென இருக்க வேண்டுமானால் தேங்காயை உடைத்து முழு அளவாக தேங்காய் ஓட்டிலிருந்து வெளியே தோண்டி எடுத்த பின்பு தேங்காயின் மேல் பகுதியில் உள்ள சிவப்புத் தோல் பகுதியை சீவிவிட வேண்டும். பின்பு கேரட் துருவினால் பூ மட்டும் வெள்ளையாக வரும். இப்படிச் செய்தால் பர்ஃபி பளிச் சென்று இருக்கும்.

பலகாரங்கள் செய்ய எண்ணெய் வைக்கும்போது இஞ்சி, வாழைப் பட்டையை அம்மியில், நசுக்கி மறக்காமல் போட்டு பொரித்து எடுத்த பிறகே உபயோகிக்க வேண்டும். இதனால் பலகாரம் அதிகமாக எண்ணெய்யைக் குடிக்காது. எண்ணெய்யும் பொங்கி வழியாது. எண்ணெய்ப் புகையினால் வாந்தி, தலைச்சுற்றல் வரவும் செய்யாது.

மிக்சரில் கறிவேப்பிலையை அப்படியே பொரித்து போடுவதைவிட, கறிவேப்பிலையை நன்கு பொடியாக நறுக்கி பின் பொரித்துக் கலந்தால் வாசனை தூக்கும்.

போளிக்கு கடலைப் பருப்பு பூரணம் செய்யும்போது வெல்லத்துக்குப் பதில் பொடித்த சர்க்கரையைப் பயன்படுத்தினால் போளி, மெல்லியதாக வெண்மையாக இருக்கும்.

தேங்காய் பர்ஃபி செய்யும்போது முதலிலேயே சர்க்கரை தேங்காய் துருவல் இரண்டையும் சேர்த்து அடுப்பில் வைக்காதீர்கள். சர்க்கரையை கம்பிப் பாகு பதம் வரும் வரை காய்ச்சிய பிறகு தேங்காய்த் துருவலைச் சேர்த்தால் அதிகம் கிளற வேண்டிய அவசியமிருக்காது. பர்ஃபியும் சீக்கிரத்தில் கெட்டியாகிவிடும்.

ஏலக்காயை வாணலியில் இளம் சூட்டில் பிரட்டி சர்க்கரை சேர்த்துப் பொடித்தால் நன்றாக பொடிக்க வரும். இதனுடன் ஒரு கிராம்பு, சிறுதுண்டு ஜாதிக்காய், ஒரு சிட்டிகை பச்சைக் கற்பூரம் சேர்த்து, திரித்து வைத்தால் இனிப்புகளுக்கு சேர்க்க சுலபமாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com