முகத்தைப் பளிச்சிட வைக்கும் தேங்காய் எண்ணெய்!

தேங்காய் எண்ணெய்யால் கிடைக்கக்கூடிய நன்மைகள் ஏராளம் என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது அவசியமாகும். அதிலும் குறிப்பாக ஃபங்கஸ் எனப்படும் பூஞ்சை தொற்று கிருமிகளை  தேங்காய் எண்ணெய் அழிக்க வல்லது.
முகத்தைப் பளிச்சிட வைக்கும் தேங்காய் எண்ணெய்!
Updated on
1 min read

தேங்காய் எண்ணெய்யால் கிடைக்கக்கூடிய நன்மைகள் ஏராளம் என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது அவசியமாகும். அதிலும் குறிப்பாக ஃபங்கஸ் எனப்படும் பூஞ்சை தொற்று கிருமிகளை  தேங்காய் எண்ணெய் அழிக்க வல்லது.

தேங்காய் எண்ணெய்யில் தலைக்கு மட்டுமல்ல முகத்திற்கும் நன்மைகள் தரக்
கூடிய ஆற்றல்கள் நிறைந்திருக்கின்றன. தேங்காய் எண்ணெய் முகத்திற்கு எல்லா வகையிலும் பயன்படுகின்றன.

இயற்கையாக கிடைக்கக்கூடிய தேங்காய் எண்ணெய்யை மேக்கப் ரிமூவராக பயன்படுத்தினால் உங்கள் சருமம் பாதிப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள உதவும்.

உங்கள் உடலில் இருந்து உறிஞ்சி எடுக்கப்படும் நீர் சத்தை மீட்டுத்தர தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது நல்ல பலன் தரும்.

தேங்காய் எண்ணெய்யுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இக்கலவையை ஸ்கரப்பராக முகத்திற்கு வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும், வட்டமாக மசாஜ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வெள்ளை திட்டுகள், சிறுசிறு முடிகள் நீங்கி முகம் பளிச்சென்று மாறிவிடும்.

குழந்தைகளுக்கு குளித்து முடித்ததும் தலைக்கு மட்டுமல்லாமல், கழுத்தை சுற்றியும், முதுகு பகுதியிலும் தேங்காய் எண்ணெய்யை தடவுவது நல்லது.

பலருக்கும் முகத்தில் இருக்கும் அலர்ஜியால் பலவித பிரச்னைகள் உண்டாகிறது. அத்தகைய அலர்ஜியை தேங்காய் எண்ணெய்யால் போக்க முடியும். தேங்காய் எண்ணெய்யில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் இதற்கு பெருமளவு துணை புரியும்.

தினமும் காலையில் எழுந்ததும் இந்த எண்ணெய்யை ஃபேஸ் வாஷ் போல மசாஜ் செய்து முகம் கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி முகம் சுத்தமடையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com