மரக்கறி பிரியாணி  

முதலில் வெட்டிய பலா பிஞ்சினை ஒரு குக்கரில் இட்டு இஞ்சி பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய் உப்பு பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து அவித்து பின் நன்றாக வடித்து கொள்ளவும். 
மரக்கறி பிரியாணி  

தேவையானவை:

அரைக்க: பெரிய வெங்காயம் - 4
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 10
இஞ்சி - 50 கிராம் 
பூண்டு - 100 கிராம் 
பலா பிஞ்சு (தோல் நீக்கி சிறிய துண்டுகளாக 
நறுக்கியது) - அரை கிலோ 
புதினா, கொத்துமல்லி  - 50 கிராம் (நன்றாக கழுவி நறுக்கியது)
நெய் - 150 கிராம் 
சீரகம் - 1 தேக்கரண்டி
பட்டை - 2
ஏலக்காய் - 5
இஞ்சி பூண்டு விழுது - 50 கிராம் 
பச்சை மிளகாய் இரண்டாக வெட்டியது - 4
ஜீரக சம்பா அரிசி  - 4 கிண்ணம் (கழுவி ஊறவைக்கவும்)
தண்ணீர் - 10 டம்ளர்
தயிர் - 1கிண்ணம் 
எலுமிச்சை சாறு - 2
பிரியாணி மசாலா 
மிளகாய் - 3
மல்லி, மிளகு- தலாஅரை தேக்கரண்டி
பட்டை - 2
கிராம்பு - 5
கல்பாசி - 10 கிராம் 
பிரியாணி இழை - 3
ஏலக்காய் -  10

சீரகம், சோம்பு - தலாஅரை தேக்கரண்டி இவை அனைத்தையும் மிதமான சூட்டில் வருத்து பொடித்து கொள்ளவும்.

செய்முறை :  

முதலில் வெட்டிய பலா பிஞ்சினை ஒரு குக்கரில் இட்டு இஞ்சி பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய் உப்பு பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து அவித்து பின் நன்றாக வடித்து கொள்ளவும். 

ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் ஏலக்காய், சீரகம், கல்பாசி மற்றும் பட்டையையிட்டு ஒரு நிமிடம் வதக்கவும், பின்பு அதில் அரைத்த இஞ்சி பூண்டு வெங்காய மசாலாவை இட்டு நன்கு பொன் நிறமாகும் வரை வதக்கவும். பின்பு அதில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் அரைத்த பிரியாணி மசாலா பொடி, அவித்த பலாக்காய் மற்றும் உப்பை போடவும் பின் அளந்து வைத்த நீர் ஊற்றி கொதிக்க விடவும்.

அரிசியை சேர்த்து மெதுவாக கிண்டவும், நீரும் அரிசியும் சம அளவு வரும்போது வெட்டிய புதினா கொத்துமல்லி நெய் ஊற்றி மூடி கனமான பொருளை மேலே வைக்கவும், நெருப்பை மிகவும் மெதுவாக வைத்து ஒரு 20 நிமிடங்கள் தம்மில் வைக்கவும். சுவையான ஆரோக்கியமான பலாக்காய் பிரியாணியை கொஞ்சம் வெங்காயப் பச்சடியுடன் சுவைக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com