செட்டிநாடு கழனி  புளிச்சாறு 

முதலில் அரிசியை நன்கு கழுவி முதலில் கழுவிய தண்ணீரை கீழே ஊற்றவும். பின் 2-ஆவது 3-ஆவது கழுவிய தண்ணீர் எடுத்துக்கொள்ளவும் அதில் புளி (150 கிராம்) எடுத்து அரிசி தண்ணீரில் போடவும் 15 நிமிடம் நன்கு ஊறட்டும்
செட்டிநாடு கழனி  புளிச்சாறு 

தேவையானவை: 

அரிசி கழுவிய தண்ணீர் - 1 லிட்டர் 
எண்ணெய் -  4  தேக்கரண்டி  
கடுகு -  அரை தேக்கரண்டி
வெந்தயம்  - 1 தேக்கரண்டி 
வேர்க்கடலை - 100 கிராம் 
பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) -1
பெரிய தக்காளி (பொடியாக நறுக்கியது) - 1
கறிவேப்பில்லை சிறிதளவு
பூண்டு - 20 பல்
புளி - பெரிய லெமன் சைஸ்
மஞ்சள்தூள் - அரை  தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - சிறிதளவு


செய்முறை : 

முதலில் அரிசியை நன்கு கழுவி முதலில் கழுவிய தண்ணீரை கீழே ஊற்றவும். பின் 2-ஆவது 3-ஆவது கழுவிய தண்ணீர் எடுத்துக்கொள்ளவும் அதில் புளி (150 கிராம்) எடுத்து அரிசி தண்ணீரில் போடவும் 15 நிமிடம் நன்கு ஊறட்டும்.

ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து லேசான சூடு வந்தவுடன் கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்ததும்  வேர் கடலை, நறுக்கிய வெங்காயம் , தக்காளி, கறிவேப்பில்லை சிறிதளவு , இடித்த பூண்டு சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கவும்.

பின் பத்து  காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் நன்கு மிதமான தீயில் வைத்து வதக்கவும். பின்பு அரிசி தண்ணீரில் ஊறவைத்த புளி கரைசல் சேர்த்துக்கவும்.

பின் மஞ்சள் தூள், பெருங்காயம் சிறிதளவு, உப்பு தேவையான அளவு சேர்த்து 15 நிமிடம் நன்கு கொதிக்கவிடவும். ஓரளவு கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். கொஞ்சம் நறுக்கிய கொத்தமல்லியை தூவி விடவும், நம்முடைய சுவையான மணமான கழனி புளிச்சாறு  தயார். இதை சாதத்துடன் சேர்த்து சாப்ப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com